Header Ads



வெளிநாடுகளிலிருந்து எவரும், எமது தொழிற்சாலைக்கு வரவில்லை - பிரண்டிக்ஸ்


இந்தியா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் எந்தத் தரப்பினரும் மினுவங்கொடை தொழிற்சாலையை அணுகவில்லை என பிரண்டிக்ஸ் நிறுவனம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


மினுவங்கொடையில் பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் கண்டறிந்த COVID-19 தொற்று தொடர்பாக எழுந்த வினாக்கள் குறித்த தெளிவுபடுத்தும் நோக்கில் வௌியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறித்த அறிக்கையில், எங்கள் பிரண்டிக்ஸ் நிறுவனம், மினுவங்கொடையில் அமைந்துள்ள எங்கள் தொழிற்சாலையில் ஏற்பற்ற COVID-19 நெருக்கடியை வழிநடத்தும் சவாலை தொடர்ந்து எதிர்கொள்கிறது. 


இந்த செயல்முறை முழுவதும், வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பொதுமக்கள் எழுப்பும் எந்தவொரு வினாவைப் பற்றியும் புதுத் தகவல்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். 


மினுவங்கொடையில் அமைந்துள்ள எங்கள் தொழிற்சாலையில் வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர் என்பதை குறித்து வினாக்கள் எழுந்துள்ளன என்பதை நாங்கள் புரிந்துள்ளோம், மேலும் அதனை பின்வருமாறு தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்த காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் எந்தவொரு தரப்பினரும் இத்தொழிற்சாலையை அணுகவில்லை என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும். மேலும் எங்கள் மினுவங்கொடை தொழிற்சாலையில் இந்தியாவிலிருந்து எந்தவொரு துணியையும் பயன்படுத்தவில்லை என்பதையும், இந்தியாவில் உள்ள எங்கள் தொழிற்சாலைகலிளிருந்து எந்த தயாரிப்பு ஆர்டர்களையும் எடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். 


பட்டய விமானங்கள் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் ஊழியர்கள் பற்றிய வினாக்கள் குறித்து, பின்வருமாறு உறுதிப்படுத்த முடியும். இந்தியாவில் பணிபுரியும் எங்கள் இலங்கை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கைக்குத் திரும்பி பயணிப்பதற்கு இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மூன்று பட்டய விமானங்களை இயக்கினோம். 


COVID-19 ஐத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான இலங்கை அரசு நெறிமுறையை அவர்கள் தமது குடும்பங்களுடன் பின்பற்றினார்கள் என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும். இந்நெறிமுறை, PCR சோதனை மற்றும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் தத்தமது பிரதேச பொது சுகாதார ஆய்வாளர்களின் (PHI) மேற்பார்வையின் கீழ் செய்யப்படும் 14 நாள் சுய தனிமைப்படுத்தப்படல் செயல்முறை ஆகியவையை கொண்டது. 


இது தவிர, இந்த இலங்கையர்களோ அவர்களது குடும்ப உறுப்பினர்களோ யாரும் மினுவங்கொடையில் அமைந்துள்ள எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


மினுவங்கொடை தொழிற்சாலையில் COVID-19 தொற்று உறுதியான முதல் ஊழியரை அடையாளம் கண்டதற்கு பின்பும் நிறுவனம் ஊழியர்களை வேலைக்கு வருமாறு கோரியதாக குற்றம் சாட்டும் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதை நாங்கள் அவதானித்தோம். அக்காணொளியில் முக்கியமாக திகழும் பெண் ஒரு வாடகை விடுதி உரிமையாளர் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். 


மேலும் அவரது விடுதியில் வசிக்கும் இரண்டு பேர் மற்றும் குறித்த மேற்பார்வையாளர் பிரண்டிக்ஸ் மினுவங்கொடை தொழிற்சாலையால் ஒப்பந்தம் செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு சுத்தப்படுத்தும் சேவை வழங்குநர்களாக பணிபுரிகின்றனர். இந்நபர்கள் யாரும் பிரண்டிக்ஸ் ஊழியர்கள் இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். 


ஒரு நிறுவனம் என்ற வகையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வசதியை கவனித்துக்கொள்ள நாம் ஒன்றாகத் திரண்டு வருகிறோம். அதே நேரத்தில், எங்கள் சமூகங்கள் மீது மற்றும் எங்கள் நாட்டின் மீது இதன் தாக்கத்தை குறைத்து இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற கூட்டாக முயற்சி செய்கிறோம்.

1 comment:

  1. New Zealand second wave of Covid-19 was believed, quarantine breached. It seems here also similar breaches could have happened. One case in New Zealand after self isolation in the quarantine centre (after 14 days)during this period he had 3 negative PRC tests. Then he left the isolation Centre. After few days he got symptoms of COVID 19 and he tested positive. This has to be noted here in Sri Lanka. Self isolation is not guaranteed to a person is free from COVID-19.

    This factory shows that they have clearly ignored the quarantine rules.

    ReplyDelete

Powered by Blogger.