Header Ads



அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை, சஜித்துடன் தொடர்ந்து இருப்பேன் - றிசாத்


அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற குழு அறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.


மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற 52 நாள் அரசாங்கத்தில் கூட இணையாது ரணில் விக்ரமசிங்கவுடன் இருந்ததாகவும் தற்போதைய சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் இருக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக தனது சகோதரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டாலும் அதனை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் எதுவும் இல்லை எனவும், அப்படியான சாட்சியங்கள் இருக்குமாயின் தன்னையும் தனது சகோதரரையும் கைது செய்வதில் எந்த தடையும் இல்லை எனவும் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.


தான் அரசாங்கத்துடன் இணைய போவதாகவும், இனவாத தலைவர்கள் எதிர்காலத்தில் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தமை குறித்து றிசார்ட் பதியூதீன், கடும் கவலையை வெளியிட்டதுடன் திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தியுள்ளார்.


இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாட்சியங்கள் இல்லாவிட்டால், சந்தேகநபர் ஒருவரை விடுதலை செய்வதை பிரச்சினையாக தான் காணவில்லை எனக் கூறியுள்ளார்.

4 comments:

  1. பெரும்பாண்மையான சிங்கள மக்கள் நீங்கள் உட்பட சகல முஸ்லிம் தலைஒர்கள் மீதும் கடும் கோபத்தில் உள்ளார்கள்.
    ராஜபக்கஷ உங்எளை இணைக்க அனுமதித்தாலும், சிங்கள மக்கள் தயாரில்லை

    ReplyDelete
  2. Don´t worry brother we all know what going of their Sri lanka.Your muslim that only reason they want revange you and your family.Allah will protect all sheithan targets you.

    ReplyDelete
  3. Mr. Badiudeen, why did you take so L.........O........N.......G to say this? If only you stated this at least 2 weeks back when there was much speculation about your joining the Govt., you would have avoided so much Adverse comments about you and also the community.

    ReplyDelete
  4. உண்மைதான். சில முஸ்லிம் தலைவர்களுடன் சகோதர சிங்கள மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். காலாகாலமாக இலங்கையின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காது பக்கபலமாக இருந்து வந்த முஸ்லிம் சமூகத்தை தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தியமையே இத்தகைய வெறுப்புக்கு காரணமாகலாம்.
    வரலாற்று ரீதியாக இலங்கையை சர்வதேசத்திடம் விற்றுப் பிழைப்பு நடாத்திய மற்றைய சிறுபான்மையை, சகோதர சிங்கள சமூகம் ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டது என்ற உண்மையை சில அறிவீனர் மறந்துவிட்டனர்.

    ReplyDelete

Powered by Blogger.