October 04, 2020

முதலில் மாடறுபதை உடனடியாக தடைசெய்து, பின் ஏனைய விலங்குகளை அறுப்பதையும் நிறுத்த வேண்டும்


(செ.தேன்மொழி)

நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர் ஒருவர் செய்ய வேண்டியது அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்திக் கொள்வதல்ல , நாட்டு மக்களுக்கான நலனைப் பெற்றுக் கொடுப்பதே என்று விலங்குகள் மற்றும் இயற்கைக்கான நீதி அமைப்பின் தலைவரான ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் , அவ்வாறு நிறைவேற்றும் வரையில் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நாரஹேன்பிட்டி -  ஸ்ரீ சங்கா விகாரை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை -04- விலங்குகள் மற்றும் இயற்கைக்கான நீதி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது ,

உயிரினங்களை வதைப்பதை அனைத்து சமயங்களும் பாவச் செயல் என்றே கூறுகின்றன. இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடைச் செய்ய வேண்டும் என்பது தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் விடயமாகும். அதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு மாடுகளை வெட்டுவதை தடைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

இதன்போது ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் எந்த இன, மத பேதமுமின்றி அதனை ஆதரித்திருந்தனர். ஆனால் , இந்த தீர்மானமானது உடனே நிறைவேற்றப்படாமல் ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டது. இதற்கு பிரதான காரணம் இவ்வாறு இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட்ட அழுத்தமாகும்.

தற்போது இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதனால் மேலும் காலங்கடத்தாமல் அதனை உடனே அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இந்நிலையில் சிலர் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது பாவச் செயல் என்றால் , ஏனைய விலங்குகளை உணவுக்காக பயன்படுத்துவது பாவச் செயல் இல்லையா?  என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுவும் பாவச் செயல்தான். ஆனால் , முதலில் நாம் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடுத்துவிட்டு , அதிலிருந்து ஏனைய விலங்குகளையும் இறைச்சிக்காக வெட்டுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். முதலில் இந்த தீர்மானமானது ஒரு இனத்தையோ , மதத்தையோ இலக்கு வைத்து எடுக்கப்பட்டதல்ல என்பதை கவனத்திற் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.

6 கருத்துரைகள்:

hmmmmmmmmmmmmmmmmmmmmmm...... eppavaavathu ungaluk purium appa neethi niyaayangal purium

Very good recommendation. First of all Parliament food must be only Vegetarian. This will save lots of money. I think. don't think this want happen, don't even MP,swill support.

So, now no need to go the butcheries.... just can eat where we sit as by parcels....hahaha

நீதிக்காகப் போராடிய மனிதர்களைக் கொல்லலாம்.
உணவுக்காகப் படைக்கப்பட்ட உயிரினங்களைக் கொல்லக் கூடாது.
நீரிலும் உயிரினங்கள் இருப்பதாக அறிகிறோம்.
அதனையும் அருந்தக் கூடாது என்றும் சட்டம் வரலாம்.
அதிலுள்ள மீன்களையும் உண்ணக் கூடாது என்றும் சட்டம் வரலாம்.
மொத்தத்தில் மனிதன் உயிர் வாழ எது கொள்ளப்பட வேண்டும் என்றால்...
அறியாமையைத்தான் கொல்ல வேண்டும்.

பின்னர் மனிதன் சுவாசிப்பதையும் உயிர்க்கொலை என்ற அடிப்படையில் தடை செய்யவேன்டும்.

முஸ்லிம்களை பழிவாங்க கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் தொடர்பாக முஸ்லிம்கள் பேசாமல் இருப்பது சிறந்தது என்பது எனது அபிப்பிராயம். உங்களுடைய அபிப்ராயங்கள் மாறுபட்டதாக இருக்கலாம்.

* இதனால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களை விட தமிழர்களும் சிங்களவர்களும் ஆவர்.

* முக்கியமாக இங்கு முஸ்லிம் இறைச்சிக் கடை முதலாளிக்கு பாதிப்பு உள்ளது.

* மேலும் பிரதேச சபைகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட உள்ளது.

முஸ்லிம்களின் உணவுக்கு மாட்டை விட்டு விட்டு ஆடு,கோழி போன்ற உணவுகளை உட்கொள்ள எந்த விதமான தடைகளும் இல்லை என்பதை மற்ற இனத்தவர்கள் புரிந்து கொண்டால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

மேலும் இங்கு மிக முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடயம்.

* மாடு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* எனவே முஸ்லிம்களுக்கு மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.

இங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால்!

அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட நிறைய விடயங்கள் திரைக்கு அப்பால் நடந்து கொண்டே இருக்கின்றன.

இதை நோக்கும்போது அரசாங்கத்தினால் எவ்வாறான உத்தரவாதத்தையும் நூற்றுக்கு நூறு வீதம் கொடுக்க முடியாது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் பிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகளை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

தண்டனைகள்

இவ்வாறு முஸ்லிம்
பிரதேசங்களில் திரைக்கு அப்பால் அறுக்கப்படும் மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், தண்டனைகள் கிடைக்கலாம்,

* ஆனால் மரண தண்டனை கொடுக்க மாட்டார்கள். (இந்தியாவில் Ajan அஜன் கொடுப்பதுபோல்.)

யாருக்கு இலாபம்

1. மாட்டு இறைச்சி இறக்குமதியாளர்கள்
2. மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி பத்திரம் வழங்குபவர்கள்
3. முஸ்லிம்கள்- சலுகை விலை, உள்நாட்டில் மாடுகளின் விலை குறைதல்
4. ஆட்டு பண்ணையாளர்கள்
5. கோழிப் பண்ணையாளர்கள்

யாருக்கு நஷ்டம்

1. மாட்டுப் பண்ணையாளர்கள்
2. கிராமிய விவசாயிகள்
3. மாட்டிறைச்சி கடை வியாபாரிகள்
4. இறைச்சி தொழிலாளிகள்
5. பிரதேச சபைகள்
6. குர்பானி கொடுக்கும் முஸ்லிம்கள்
7. முஸ்லிம்களுக்கு மாடுகளை விற்கும் தமிழர்கள்
8. முஸ்லிம்களுக்கு மாடுகளையும் விற்கும் சிங்களவர்கள்

உண்மை சம்பவம்

நாங்கள் ஒரு பசுமாட்டை நீண்ட நாட்கள் வளர்த்து வந்தோம். அதில் பால் அருந்தினோம்.

அதை இறைச்சிக் கடைக்கு கேட்டார்கள்...

எங்களுக்கு அதை இறைச்சி கடைக்கு விற்பனை செய்ய விருப்பமில்லை.

எனவே அதை குறைந்த விலைக்கு ஒரு தோட்டத்துக்கு விற்பனை செய்தோம்.

ஒரு மாதத்துக்கு பின்னர் கேள்விப்பட்டோம். நாம் குறைந்த விலைக்கு விற்பனை செய்த அந்த
பசு மாட்டை அதிக விலைக்கு இறைச்சி கடைக்கு விற்பனை செய்துள்ளார்.

“இதுதான் திரைக்கு அப்பால் நடக்கும் உண்மை”

சைவ உணவு உண்பவர்கள் தனது மாடுகளை பண்ணையாளர்களுக்கு அல்லது வேறு நபர்களுக்கு விற்பனை செய்வது பொதுவான வழக்கம்.

இறுதியில் அந்த மாடுகள் இறைச்சிக் கடைக்கு செல்கின்றன.

“நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த கிழட்டு மாடுகளின் விற்பனை வருமானம் மாட்டு இறைச்சி மூலமே நம்மை அடைகின்றன”

“யாருக்கு இந்த யதார்த்தமான உண்மையை புரிந்து கொள்ள முடியுமோ அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள்”

எனவே முஸ்லிம்களை பொறுத்தவரை இதில் பெரிதாக ஒரு நஷ்டமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

Post a comment