Header Ads



நடவடிக்கை இல்லையேல் ஹக்கீமும், ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்பது நிரூபணமாகும் - சுமந்திரன்


“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பியை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் 20 இற்கு ஆதரவளித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது;

“அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹக்கீமும் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற சந்தேகம் நிரூபணமாகும். அதே போல் இரு தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.

எனவே, 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஹக்கீமும், ரிஷாத்தும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 20ஐ ஆதரித்தவர்களைக் கட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தும் வெளியேற்ற இரண்டு கட்சித் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்க முடியும்” என்றார்.

9 comments:

  1. Well said Mr Sumenthiran,
    It could very well be a set up in which both Hakeem and Rishad were asked to oppose while 6 MPs from their parties to vote for 20A. Because Sinhala Buddhists won't accept Hakeem and Rishad openly supporting the Government.

    ReplyDelete
  2. Let them do whatever they need for their people as they know the ground situation and its their own party... No need you people to interfere in their own business... May be diasporas...forcing you...!!!!

    ReplyDelete
  3. சுமந்திரன் சார், நீங்க ஒரு tupe light. றிசாத்தும் ஹக்கிமும் ஏமாற்று பேர்வளிகளென இப்பவா கண்டுபிடித்தீர்கள்?
    மனோ கணேசன் சார் ஒரு gentleman

    ReplyDelete
  4. We already told not to Cooperate with Muslim parties since your Political career begun.
    We still not learnt from the past and the reason why they evacuated from Nothern province.
    Please study from the history.

    ReplyDelete
  5. நேற்றைய ஊடகத்தில் சுமந்திரன் ஐயா இது சம்பந்தமாக கூறியது பிழை என்ற மாதிரி எழுதப்பட்டிருந்தது. மேலே உள்ள எழுத்துக்களும் விடயங்களும் சரிதானே. யாராவது இதற்கு மறுப்புத் தெரிவிக்க முடியுமா?

    ReplyDelete
  6. ஹக்கீமையும் றிசாத்தையும் உங்களது வண்டியில் ஏற்றிக் கொண்டு எங்காவது பயணம் செய்யுங்கள்.அல்லது கடலில் குதியுங்கள்.

    ReplyDelete
  7. Hard to disagree with you Mr. Sumanthiran. Over to you Mr. Rauf Hakeem and Mr. Rishard Bathiudeen.

    ReplyDelete
  8. நியாயமான வாதம்!

    ReplyDelete

Powered by Blogger.