Header Ads



கொரோனா பற்றிய தகவலை மறைப்பவர்களுக்கு, எதிராக கடும் சட்ட நடவடிக்கை


கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை சுகாதார தரப்பிற்கும் பொலிஸாருக்கும் வழங்காமல் மறைக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


சில நிறுவன பிரதானிகள் இவ்வாறு தகவல்கள் வழங்க தயங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,


தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவ்வாறான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.சுகாதார பரிசோதகர்கள் வீடுகள் மற்றும் தொழிற்சாலை கள் மற்றும் நிறுவனங்களுக்கு வருகை தந்து தகவல் திரட்டுகின்றனர்.


இந்த சமயங்களில் தகவல்கள் வழங்காமல் மறைத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும். தமது வீடுகளில் உள்ளவர்கள், வீடுவந்த சென்றோர்,பழகியோர், போன்ற அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும்.யாராவது தகவல் வழங்காமல் மறைத்து பின்னர் அது பற்றிய உண்மை கிடைத்தால் கைது செய்து சிறையில் அடைக்க நேரிடும்.எனவே சகலரும் சுகாதார தரப்பினருக்கும் பொலிஸாருக்கும் ஒத்துழைப்ப வழங்க வேண்டும்.சமூகத்தில் இது பரவுவதை தடுக்க பங்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.(பா)

No comments

Powered by Blogger.