Header Ads



அல்லாஹ்வின் சம்மதத்துடன் கொடி பறக்குமென்கிறார் எர்துகான், துருக்கியை புறக்கணிக்க சவுதி அழைப்பு


முஸ்லிம் உலகின் இரண்டு பெரிய சக்திகளான செளதி அரேபியாவும், துருக்கியும் இப்போது ஒன்றுக்கொன்று நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீராக இல்லை என்ற ஊகங்கள் இப்போது வரை நிலவி வந்தன. இருநாடுகளுமே மத்திய கிழக்கில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த விரும்புகின்றன.

ஆனால் இப்போது இரு நாடுகளிலிருந்தும் வெளிவரும் அறிக்கைகள் அவற்றுக்கு இடையிலான தூதாண்மை உறவுகளை புதிய திசையில் கொண்டு செல்லக்கூடும்.

துருக்கியின் அதிபர் ரிசெப் தயீப் எர்துவானின் அறிக்கையைத் தொடர்ந்து, செளதி அரேபியாவின் வர்த்தக சபைத் தலைவர், துருக்கியை எல்லா வகையிலும் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"ஒவ்வொரு செளதி குடிமகனும், அவர் ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சரி, நுகர்வோராக இருந்தாலும் சரி, துருக்கியை எல்லா வகையிலும் புறக்கணிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. இறக்குமதி, முதலீடு அல்லது சுற்றுலா போன்ற எல்லாமே புறக்கணிக்கப்படவேண்டும். இவை அனைத்தும் நமது தலைவர், நம் நாடு மற்றும் நமது குடிமக்களுக்கு எதிரான துருக்கி அரசின் தொடர்ச்சியான எதிர்ப்பிற்கு பதிலடியாக இருக்கும், "என்று கவுன்சில் ஆஃப் செளதி சேம்பர்ஸ் தலைவர் அஸ்லான் அல் அஸ்லான், தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ட்வீட் ஏன் வெளியானது?

சமீபத்தில் துருக்கி அதிபர் எர்துவான் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் தருவதாக இந்த ட்வீட் பார்க்கப்படுகிறது.

சில வளைகுடா நாடுகள் துருக்கியை குறிவைக்கின்றன என்றும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் கொள்கைகளை அவை பின்பற்றுகின்றன என்றும் சமீபத்தில் துருக்கியின் பொதுச் சபையில், அதிபர் எர்துவான் கூறினார்.

பின்னர் அவர் கிண்டலாக கூறினார், "இன்று கேள்விக்குள்ளான நாடுகள் நேற்று வரை இருக்கவில்லை என்பதையும், நாளை இல்லாமலும் போகலாம் என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆயினும், அல்லாவின் சம்மதத்துடன் நாம் இந்தப்பிராந்தியத்தில் நமது கொடியை தொடர்ந்து பறக்கவிடுவோம்."

எர்துவானின் இந்த அறிக்கை ,1932 ஆம் ஆண்டில் அமையப்பெற்ற செளதி அரேபியாவுடன் நேரடியாக இணைத்து பார்க்கப்படுகிறது.

புறக்கணிப்பு ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா?

செளதி அரேபியாவின் புறக்கணிப்பு வேண்டுகோள், சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவரிடமிருந்து வந்தது. அதன் தாக்கம் எவ்வளவு விரிவாக இருக்கும் என்பதை காலம்தான் சொல்லும். ஆனால் இதன் மூலமாக ஒரு விளைவு ஏற்பட்டால், அது துருக்கியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

துருக்கியின் நாணயமான லிராவின் தொடர்ச்சியான வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, துருக்கியின் நாணயம் லிரா, தொடர்ந்து எட்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கூடவே அதன் மதிப்பு கடந்த தசாப்தத்தில் 80 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்த வேண்டுகோள் நடைமுறைப்படுத்தப்பட்டால், துருக்கியில் பாதிப்பு ஏற்படக்கூடும். ஏனெனில் துருக்கியில் செளதி அரேபியாவின் சுமார் ஆயிரம் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இது தவிர, பெரும் எண்ணிக்கையில் செளதி நாட்டவர்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்கின்றனர் என்று மத்திய கிழக்கு விவகாரங்களின் நிபுணர் கமர் ஆகா கூறுகிறார்.

BBC

4 comments:

  1. NO UNITY EACH OTHER EGO.
    OUR WILL BE SUCCESS.
    ALREADY IN THE HADEES TURKEY
    WILL FALL .IT IS STARTED.WE ARE GREEDY FOR DUNYA.
    HUBBUD DUNYA KULLU HATTIHYYA

    ReplyDelete
  2. தேசியவாதம் சமூகத்தை பிரித்துகொண்டே இருக்கிறது

    ReplyDelete
  3. May Allah Unite our Muslim leaders under guidance of Quran and Sunnah...

    ReplyDelete
  4. Behaviour of Saudi is not acceptable to Muslim Ummah. There is a conspiracy to weaken Muslim nations by enemies of Islam. It is very sad Saudi is supporting to enemies of Islam by silence to open relationship with Israel with Gulf countries.
    May Allaah give strength to Turkey to restore Khilafath i.e was lost in 1924.

    ReplyDelete

Powered by Blogger.