Header Ads



“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்”


2020.09.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஆலிம்கள் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் “மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி புதுக்கடை மீரானியா ஜுமுஆ மஸ்ஜிதில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. 

இதில் இலங்கை அரபுக் கல்லூரிகள் சம்மேளனத்தின் 8 பிராந்தியத்திலிருந்து அதன் ஒருங்கிணைப்பாளர் உட்பட 3 பேர் விகிதமும் கொழும்பு மாவட்டத்திலுள்ள அரபுக் கல்லூரிகளிலிருந்து 2 உஸ்தாத்மார்கள் விகிதமும் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் 4 பிரதேசக் கிளைகளிலிருந்து 3 உலமாக்கள் விகிதமும் அழைக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக் மற்றும் இளைஞர் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் கலந்துகொண்டனர். மேலும், வருகைத் தந்த அனைவருக்கும் நூலின் இலவச பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.



5 comments:

  1. மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்" என்ற நூல் காலத்தின் தேவை. இந்நூல் இலவசமாகவோ அல்லது விலைக்கோ ஒவ்வொரு முஸ்லிம்களின் கைகளுக்கும் சென்றடைய சம்பந்தப்பட்டவரகள் முயற்சி எடுக்க வேண்டும். செலவினை ஈடுசெய்ய நன்கொடைகளும் வழங்க பலர் தயாராக இருப்பார்கள்.

    ReplyDelete
  2. முஸ்லிம்களை அல்லது இஸ்லாத்தை மாத்திரம் மைய்யப்படுத்தி இப்புத்தகம் எழுதப்பட்டிருந்தால் இது ஒரு தேவையற்ற புத்தகம் . இலங்கையில் பௌத்த மதத்தில் அதிகமான தீவிரவாதம் , இனவாதம், பயங்கரவாதம் ,பொறாமை என்பன நிறைந்துள்ளது. அதனால்தான் அந்த இனத்தவருடன் தமிழர்களுக்கும் வாழ முடியவில்லை.

    ReplyDelete
  3. As long as the salafism and Wahhabism are there in srilanka we cannot eras extremism.

    ReplyDelete
  4. As long as the salafism and Wahhabism are there in srilanka we cannot eras extremism.

    ReplyDelete
  5. As long as the salafism and Wahhabism are there in srilanka we cannot eras extremism.

    ReplyDelete

Powered by Blogger.