Header Ads



பாரிஸில் 5 பேரை கோரமாகக் கொலை செய்தவரின், தற்போதைய நிலை என்ன..?


பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட ஐந்து பேரை கோரமாகக் கொலை செய்தவ இலங்கைத் தழிழர் சுய நினைவுடனேயே இந்தப் பாதகச் செயலைச் செய்திருக்கின்றார் என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அதனைவிட, காவல்துறையின் விசாரணைகளின் போது மேலும் பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

உலகம் முழுவதிலுமுள்ளர்களை அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பிரேஞ்சுப் பத்திரிகைகள் மூலம் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றது.

கடந்த சனிக்கிழமை பாரிஸிலுள்ள தன்னுடைய வீட்டில் வைத்து கத்தி, சுத்தியல் போன்றவற்றைப் பயன்படுத்தி தன்னுடைய மனைவி, இரண்டு பிள்ளைகள், இரண்டு மருமக்கள் ஆகியோரை அவர் கோரமாகக் கொலை செய்திருந்தார். அதனைவிட நெருங்கிய உறவினர்களான சகோதரி, மைத்துணர், அவர்களுடைய இரு பிள்ளைகள் என மேலும் நால்வரை அவர் படுகாயங்களுக்கு உள்ளாககியிருந்தார்.

கடும் காயங்களுடன் தப்பிச் சென்ற சிறுவன் ஒருவன் கொடுத்த தகவலையடுத்தே அப்பகுதிக்கு அம்புலன்ஸ், காவல்துறை என்பன விரைந்துவந்து நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

கொலைச் சந்தேந நபரும் தன்னைத்தானே தாக்கியதில் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பற்றிய தகவல்களைப் பிரேஞ்சுப் பத்திரிகைகள் தொடர்ந்தும் வெளியிட்டுவருகின்றன.

இவர் மன நலம் குறைந்தவர்களுக்கான மருத்துவமனைக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளார்.

ஐந்து கொலைகளை இவர் எதற்காகச் செய்தார் என்பதற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கொலை செய்யும் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இளம் குடும்பத்தவரான இவர், தன்னுடைய இளம் மனைவி, ஐந்து வயதான குழந்தை, 18 மாதக் குழந்தை மற்றும் இரண்டு மருமக்களையும் தனது வீட்டில் வைத்தே கொடூரமாகக் கொலை செய்தார். தனது 18 மாத குழந்தையை மூச்சுத் திணறவைத்தே அவர் கொலை செய்ததாக பிரான்ஸ் காவல்துறை தெரிவித்தது.

கொலை நடைபெற்ற போது வீட்டின் அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தது. 10 முதல் ஒரு மணி நேரத்துக்குள் இந்தக் கொலைகள் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவிக்கின்றது. தன்னுடைய வயிற்றிலும், களுத்திலும் காயங்களை ஏற்படுத்திக்கொண்ட இவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் அப்போது கோமா நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

போதை, மது போன்ற பழக்கங்கள் இவருக்கு இருக்கவில்லை என்பதும் மருத்துவ பரிசோதகைளில் தெரியவந்திருக்கின்றது.

இவர் உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் எனவும், குழந்தைகள் மீது அன்பும் பற்றும் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவர் அமைதியானவர் எனவும், பிரேஞசுச் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பாடலைக் கொண்ட ஒருவர் எனவும் பாரிஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.