Header Ads



கறுப்பு சந்தையில் 4500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மஞ்சள்


400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் ஒரு கிலோகிராம் தற்போது கறுப்பு சந்தையில் சுமார் 4500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு - புறக்கோட்டை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 


உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக வௌிநாடுகளில் இருந்து மஞ்சள் இறக்குமதியை தடை செய்தவாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசு அறிவித்தது. 


இதனை தொடர்ந்து மஞ்சளுக்கு இலங்கையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. 


இலங்கையை பொறுத்த வரையில் இந்தியாவில் இருந்துதான் அதிகளவான மஞ்சள் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 


தற்போது மஞ்சளுக்கு பதிலாக கோதுமை மா மற்றும் மஞ்சள் நிற பூச்சிகளை கலந்து போலி மஞ்சள் இலங்கை சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றனை கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்திருந்தது. 


எனினும், போலி மஞ்சள் சந்தையில் தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் தெரிவித்து வருகின்றன

1 comment:

  1. Turmeric has power of anti virus and anti biotic. It also helps to increase the immune system of human body. More over, it has the capacity of curing many symptoms. Why do the government has blocked such a herbal spice without people’s consumption?? Is it a conspiracy to expose the people and make them falling sick easily in a situation like covid pandemic?? Foreign liquor is being imported freely!

    ReplyDelete

Powered by Blogger.