Header Ads



மது மாதவ பிடிபடாமல் இருக்க, 30 நாட்கள் மறைத்து வைத்திருந்தோம் - அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு


(அன்சார் எம்.ஷியாம்)

கடந்த ஆட்சியின் போது நாங்கள் மது மாதவ அரவிந்தவை சுமார் 30 நாட்களுக்கும் மேலாக மறைத்து வைத்திருந்தோம்.அடிப்படை உரிமை வழக்கு ஒன்றிலிருந்து அவரைக் கைது செய்வதைத் தடுக்கும் வரை பொலிஸாரால் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை  தற்போது நான்கு நாட்கள் கடந்த பின்னரும் பொலிஸாரால்  கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற ஓர் ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் - ரிஷாத் பதியுதீனைக் கைது செய்வதில் பொலிஸார் அதிக செயல் திறனுடன் இயங்க வேண்டும். மேலும் ரிஷாதை நாங்கள் எந்த சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் அவரது ஆதரவை நாட மாட்டோம். அப்படி ஒரு நிலை ஏற்படுமானால்,குறித்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதைக் கைவிடுவோமே ஒழிய- ரிஷாத் போன்றவர்களை ஒரு போதும் எம்மோடு இணைத்துக் கொள்ள மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

சமல் ராஜபக்ஷ ரிஷாதுடன் கைகுலுக்கிக் கொண்டதே இந்த சம்பவத்துக்குப் பின்னணி என்ற கருத்துக்குப் பதிலளிக்கையில்- அந்தக் கைகுலுக்கல் ஒரு சாதாரண விடயமே.அது இரண்டு கரங்களுக்கிடையேயான கைகுலுக்கல்: இரண்டு இதயங்களுக்கிடையே ஆனதல்ல: இரண்டு எதிரி நாடுகள் கூட இவ்வாறு கைகுலுக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல இருந்திருக்கின்றன. அது ஒன்றும் சிநேகபூர்வமான கைகுலுக்கல் அல்ல என்றும் கருத்துரைத்தார்.

2 comments:

  1. fu***g criminal idiot, time will tell the verdict

    ReplyDelete
  2. This man Gammanpila is talking Big. What will he do if Badiudeen appears on the voting day and votes for 20A along with his Party Members? Will he Show his Objection in any practical way by Refraining from voting for 20A? We will know in just a few days. Lets wait and see

    ReplyDelete

Powered by Blogger.