Header Ads



"முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுடன், சேர்ந்து போவதுதான் நல்லது" (10 உதாரணங்கள்)


முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுடன்சோ்ந்து போவது தான் நல்லது.

 உதாரணத்திற்கு எனது அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்பு அமைச்சின்  குறிப்பாக கொழும்பு வாழ் சிறுபான்மையினா் தமது வீடு, வீட்டுரிமை. வீடமைப்புக் கடன், காணிப்பிரச்சினைகள், சட்டவிரோத கட்டிடங்கள் பரம்பரையாக வியாபாரம் செய்த கடைகள், வாடகைத் தொடா்மாடி வீடுகள், தொழில் பிரச்சினைகள், மாநகர சபை அனுமதியின்றி வீடுகள் நிர்மாணிப்பு, போன்ற பல பிரச்சினைகள் கடந்த ஒரு வருட காலத்தில்  என்னிடம் வந்து அம் மக்கள் கூறி அழுத காட்சிகள் ஏறாளாம்   அவா்களது பிரச்சினைகளை கையால்வதற்கு அரசின் பக்கம் மக்களால் தெரிபு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பிணா்கள் இல்லாமையினாலும்  முஸ்லிம்கள் என்றாலே அவா்கள்  ஜ.தே.கட்சிக்காரா், அல்லது டெலிபோன் கட்சிக்காரா்கள்   -என பல  சோதனைகள் இதற்கு பல உதாரணங்களைச் இங்கு சொல்லமுடியும்..   

(1) கடந்த 2 மாதத்திற்கு முன்பு  20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் எனது அலுவலகத்திற்கு  முன் - வந்து நின்றாா்கள். என்ன விடயம் - நாங்கள் எல்லோறும் சிலேவ் ஜலன்ட்  வாழ்கின்றோம். எங்களது தொடா்மாடி புகையிரத நிலையத்திற்கு பக்கத்தில் உள்ளது.  முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச காலத்தில்  80 வீடுகள் கொண்ட தொடா்மாடி வீடுகள் எங்களுக்கு  தரப்பட்டன. ஆனால்  தற்பொழுது பிள்ளைகள் குட்டிகள் திருமணம் முடித்து 220 குடும்பங்களாக பெருகி அவ் தொடா்மாடி வீடுகளில்  வாழ்கின்றோம். நகர அபிவிருத்தி அதிகார சபை  அவ் வீடுகளை  உடைக்கப்போகின்றது. 80 குடும்பங்களுக்கு 80  வீடுகள் மட்டுமே  தருவாா்களாம், ஏனைய 140 குடும்பங்களும் நடு வீதியில் - யாருடன் போய்ப்  பேசுவது என்று தெரியாது ?. செத்சிரிபாயவுக்கு சென்றால் மெயின் கேற்றில் வைத்தே அங்கு  உள்ள பாதுகாப்பு அதிகாரிகளோ  உள் போக முடியாமல் எங்களை  விரட்டுகிறாா்கள். நாங்கள் வாக்கு போட்ட எதிா்கட்சி எம்.பி மாா்களின் முன்னைய அரசில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இவ் விடயத்தினை பேசியதால்     இன்னும்  எங்களை பழிவாங்கள்கள் நடைபெறுகின்றது. எங்கள கூட்டி வந்து பேச யாறும் அரச மந்திரிமாா்கள்  இல்லை. நாங்கள் யாரிடம் போய் எங்களது பிரச்சினையை பேசுவது ?  அது தான் நாங்கள் பெண்களாகவே வந்துள்ளோம். உரிய தலைவரைச் சந்தித்து பேசுவதற்கு -  அவா்கள் பேசினாா்கள் ஆனால் அந்தப் பெண்களது பேச்சு எடுபடவில்லை.

2. எனக்கு ஒரு  தொலைபேசி அழைப்பு - கல்முனையில் இருந்து - அம்பாறை மாவட்ட முகாமையாளா் பதவிக்கு நியமிக்கப்படவேண்டியவா் மருதமுனையைச் சோ்ந்த ..... முகாமையாளா் தரத்தில் உள்ளவா் அவா்  20 வருடமாக  முகாமையாளா் தரத்தில் உள்ளவா் கிளிநொச்சியில் 5 வருடங்கள் மாவட்ட முகாமையாளராக பதவி வகித்தவா ஆனால் அம்பாறை அலுவலகத்தில் இருந்த பிரதம இலிகிதராக இருந்த பெரும்பான்மை பெண்னுக்கு பதில்  மாவட்ட முகாமையாளா்   பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. இது என்ன அநியாயம்.  காரணம்  அவா் பெயருக்கு முன்னாள் முகமட்  என்ற பெயா் இருந்ததனால்தான்  போல .  அப் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை.  அம்பாறை மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களின் தலைவா் பதவிகள் முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுவருகின்றது.

3. இன்னும்  ஒர்அழைப்பு - அம்பாறை மாவட்ட கணக்காளா் பதவி வகித்த   முஸ்லிம் பெண் திடிரென மட்டக்களப்புக்கு மாற்றம்  ஏன் ? அம்பாறை மாவட்டத்திற்கு 200 வீடுகள் இலவசமாக நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது ஒரு வீட்டுக்கு  6 இலட்சம் ருபா  மாணியம்  3 சமுகங்களுக்கும் அதனை சமமாக பிரிக்கனும் ஆனால் 200 வீடுகளும் அம்பாறை தோ்தல்தொகுதியில் உள்ள  அரச பா.உறுப்பிணா்களது பட்டியல் ஊடாகச் சென்றதைக்  கண்டுபிடித்தாா் ? என்ற காரணத்தினால்  அம் முஸ்லிம் பெண் கணக்காளா் திடீா் மாற்றம்.

3. தெமட்டக்கொடையில் தொடா் மாடியில் வசிக்கும்  பெண்  வீட்டுடன் - 2 போ்ச் காணியை சட்டவிரோதமாக ஒர் அனேக்ஸ் நிர்மாணித்து 20 வருடங்களாக வாழ்ந்து வருகின்றாா். .. முன் வீட்டில் வசிக்கும் பெருபாண்மைப் பெண் தற்போதைய அரசின் ஆதரவாளா் அவா் இங்கு வந்து  சட்டவிரோதமாக அரச காணியைப் பிடித்துள்ளதாக முறைப்பாடு  செய்துள்ளாா்   3 நாளைக்குள் அதிகார சபையினால் உடைப்பதற்கு  பொறியியலாளா் நடவடிக்கை எடுத்துள்ளாா்கள்.

4. இன்னும் ஒருவா் வந்து நான்  கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவன் எனது வீட்டினையும் கடையும் உடைத்தாா்கள் புதிதாக வீடுகள் கட்டும் போது வீடும் கடையும் தருவதாகக் கூறினாா்கள். ஆனால்  அந்த வீடு வேறு ஒருவருக்கு வழங்கிவிட்டாா்கள். நகர அபிவிருத்தி அதிகார சபையின் தெரிந்த யாறும் உள்ளாா்களா ? 

7. முன்னைய அரசில் காலத்தில்  ஒப்பந்த அடிப்படையில் எனக்கு நியமனம் வழங்கப்பட்டது.  அதன் படி 5 வருடங்கள் உள்ளக கணக்காளராக இங்கு வேலை செய்தேன்.  நான் பி,கொம், பட்டயக் கணக்காளா் 3 பகுதி  சித்தியடைந்துள்ளேன்.  இப்பொழுது என்னை புத்தளம் மாவட்டத்திற்கு மாறுதல் தந்துவிட்டாா்கள். நான் முஸ்லிம் பெண் அதுவும் வத்தளையில் வசிக்கின்றேன். 2 சிறு பிள்ளைகள் உள்ளன.  வத்தளையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்றாா்கள்.அவா்களை விட்டுவிட்டு புத்தளம் செல்லமுடியாது  பதவியை துறந்துவிட்டேன் என என்னுடன் வேலை செய்த அந்த முஸ்லிம் பெண் சொல்லிச் சென்றாள். 

8. சோ் கொழும்பில் 100 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒவ்வொறுவருக்கும் 6 இலட்சம் நிதி தருவதாக பெயா் எடுத்தாா்கள். ஆனால் கொழும்பு மாவட்ட அரச எம்.பியின் லிஸ்ட்டில் அவிசாவலை பிரதேச மக்களுக்கு அந்த வீடுகள் வழங்கப்படுகின்றது எங்களது பெயா்கள் அந்தப் பட்டியலில் இல்லை.

9.கம்பளையில் ஒருத்தாின் அழைப்பு - கண்டியில் உள்ள சதோச வில் முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அவா்களின் சிபாா்சின் பேரில் 456 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. அதில் எனது மகனும் கடந்த 5 வருடங்களாக வேலை செய்தாா். இந்த அரசு ஒப்பந்த அடிப்படை என்று அவரை நீக்கி விட்டாா்கள். அதனை மீள எடுத்து கொடுக்க முடியுமா ? 

10. சஜித் பிரேமதாஸா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் 2500 பேருக்கு நியமன் வழங்கினாா்  அனைவரும் பெரும் பாண்மையினா் அதில் முஸ்லிம்கள் 1 வீதமும்  கூட சிறுபான்மையினா்  இல்லை.  அவா்கள் அனைவரும் நீங்கப்பட்டாா்கள் ஆனால் சிறுபான்மையினா் 90 வீதம் சஜித் பிரேமதாஸாவுக்கே வாக்களித்தாா்கள்.

  இப்படி 100க்கணக்கில பிரச்சினைகள் செல்ல முடியும்

Ashraff A Samad - 


1 comment:

  1. True, the Muslims, particularly the less fortunate ones face many problems in dealing with the Authorities. What are the reasons for this?

    1. The inefficiency and the lazy attitudes of the Bureaucracy. It is
    not only the Muslims who face this problem but the entire country
    with the exception of those who wield power and those who can grease
    the palms. A clear example is of those govt. servants who go on
    Retirement but face enormous delay and trouble in getting their
    pensions.

    2. Some of the problems are created through the ignorance of people
    who just do not bother about the rules and regulations and get
    about doing what they want, the way they want, thus getting into
    problems. Again, this applies not just to Muslims but to all.

    3. It is my guess that more than others, the Muslims from Muslim areas,
    expect the Politicians to solve all their problems whether it be
    jobs, promotions, transfers and other services. Even qualified
    people go after politicians which they can easily avoid.

    It must be understood that politicians cannot do wonders and, our Muslim politicians are the least capable and, of late, they have been up against the Racists who make things very difficult for the Muslims.

    While we should learn to do things properly, the community activists must get more involved in solving the problems of the less fortunate members of the community thus reducing the dependence on Politicians and avoiding the excuse trotted by the unscrupulous politicians to join the Party in power thus making the community a laughing stock.

    .



    1.

    ReplyDelete

Powered by Blogger.