Header Ads



ரியாஜ் விடுதலைக்கு எதிராக 100 Mp க்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (09) அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. 


2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். 


அவரது கைது தொடர்பில் வலுவான சாட்சிகள் காணப்பட்ட போதிலும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாது, எவ்வித சட்ட அனுமதியுமின்றி ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 


குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு பயங்கரவாதத்திற்கு துணையாக செயற்பட்ட ரியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சியின் 100இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 comments:

  1. If he is involved, he should be charged but if he is not involved and there is no proof to proceed, how can anyone ask to detain him? If you don't like me that does not mean I should be in jail.

    ReplyDelete
  2. If he is involved, he should be charged but if he is not involved and there is no proof to proceed, how can anyone ask to detain him? If you don't like me that does not mean I should be in jail.

    ReplyDelete
  3. தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிங்கள அரசாங்கங்கள் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு பணம் கொடுத்து பல வழிகளில் (SLMC போன்ற தனிக்கட்சிகள், உளவு வேலைகள், தமிழர்எதிர்ப்பு ஊர்வலவங்கள்) முஸ்லிமகளை பயன்படுத்திக்கொண்டார்கள்.

    முஸ்லிம்களும் சொல்லபட்ட வேலைகளை சரியாக செய்து பணம். பதவிகளை பெற்று 1990 யிருந்து முன்னேறி வந்தார்கள்.

    ஆனால், 2012 க்கு பின்னர் சிங்களவர்கள் தமது உத்திகளை (strategy) யை ஏதோ காரணத்திற்காக மாற்றி விட்டார்கள். முஸ்லிம்களை பழைய நிலைக்கு கொண்டுபோக முயல்கிறார்கள். பல இனக்கலவரங்கள். பள்ளிவாசல்கள் தாக்குதல்கள் என ஆரம்பித்தார்கள், இப்பபோது பல பதிய வழிகளில் தொடர்கிறார்கள்.

    இவைகள் அணைத்தும் தமிர்களுக்கு 1980 களுக்கு முன்னர் நடந்தன. ஆனால் தற்போதும் தமிழ்கள் தமது உரிமைகள் மீது உறுதியாக உள்நாடரடிலும் வெளிநாடுகளிலும், UN யிலும் இலங்கைக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தாலும், தமிழர்கள் மீது மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறார்கள்.

    ReplyDelete
  4. பாதுகாப்புத்துறையும் சட்டத்துறையும சேர்ந்து எடுத்த முடிவின் பிரகாரம்தான் குறித்த சந்தேக நபரான ரியாஜ் பதியுதீன் என்பவர் விடுதலை செய்யப்படுவதற்குக் காரணம் என்று அறியப்படுகினறது. பாதுகாப்புத்துறையினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட ரியாஜ் ஐந்து மாத விசாரணையின் பின்னரேயே கைது செய்த பாதுகாப்புத்துறையினரின் பரிந்துரையின்படியே விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிராகக் கிளர்ந்து எழுவதும் சட்டவியாக்கியானங்கள் கொடுப்பதும் பாதுகாப்புத்துறையினதும் சட்டத்துறையினதும் நடுநிலைத்தன்மையை கேள்விக்குரியதாக்கிவிடும். தீர்ப்பு நியாயமற்றதாகவும் கேள்விக்குரியதாகவும் இருக்குமானால் இலங்கையின் உயர் சட்டத்துறையும் பாதுகாப்புத்துறையும் வாளாவிருந்துவிடுமா, என்ன?

    ReplyDelete
  5. Now we all know who are the real Racists our country.

    ReplyDelete

Powered by Blogger.