Header Ads



இஸ்ரேலுக்கும் UAE க்கும் சமாதானத்தை ஏற்படுத்தினாராம்..! - நோபல் பரிசுக்கு டிரம்ப் பரிந்துரை


இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக டொனால்ட் டிரம்ப் 2021 சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரை நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெட் முன்வைத்துள்ளார்.

ஏனைய சமாதான நோபல் பரிசு வேட்பாளர்களை விட ட்ரம்ப், நாடுகளுக்கிடையே சமாதானத்தை உருவாக்க அதிக முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அவரை பாராட்டுவதாகவும் கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெட் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவை இயல்பாக்கும் ஒரு மத்திய கிழக்கு ஒப்பந்தத்தில் செப்டம்பர் 15 ஆம் திகதி டிரம்ப் கையெழுத்திடுவார் என்று‍ வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. "ட்ரம்ப்" ஒரு மிகச்சரியான தெரிவு!

    நோர்வேயின் "நோபல்" நிகழ்ச்சி நிரல் தெளிவாக உள்ளது..

    ஏற்கனவே மியன்மார் பிரதமர் "ஆன் சான் சூ கீ" சமாதானத்திற்கான நோபல் பெற்றவுடன் " ரோஹிங்கிய முஸ்லிம்களை" படுகொலை செய்து, விரட்டியடித்து" பரிசு பெற்றதற்கான தகுதியை நிரூபித்தார்.

    இப்போது "டிரம்ப்" ...

    ஆனாலும் நோர்வே "புஷ்"கள் விடயத்தில் அநியாயம் செய்து விட்டது.

    இன்னும் .. சீன அதிபர், இஸ்ரேல் பிரதமர், இந்தியாவின் பெருமைக்குரிய பிரதமர் மோடி, இலங்கையிலிருந்து "மஹிந்த" அல்லது அவரை மிஞ்சிய "யாராவது" இப்படி லிஸ்ட் உள்ளது. இவர்களுக்கும் நோர்வே "பரிசு" வழங்குமா?

    ReplyDelete

Powered by Blogger.