Header Ads



மாகாண சபைத் தேர்தலே முஸ்லிம் சமூகத்தின் இருப்பைத் தீர்மானிக்கப்போகின்றது



(அஸ்லம் எஸ்.மௌலானா)

1949ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தந்தை செல்வா முஸ்லிம்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரித்திருந்தார். அவ்வாறே கல்முனைத் தொகுதியை முஸ்லிம்களுக்குரிய பிராந்தியமாகவும் அடையாளப்படுத்தியிருந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீட் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 20ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்று புதன்கிழமை (16) கட்சியின் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் அவரது கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மர்ஹூம் அஷ்ரப் தொடர்பிலான நினைவுப் பேருரையை நிகழ்த்துகையிலேயே அப்துல் மஜீட் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

"1949ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை பிரகடனப்படுத்தி ஆற்றிய உரையின்போது, இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமிழர்களுடன் இணையப்போகிறார்களா? அல்லது சிங்களவர்களுடன் இணையப்போகிறார்களா? அல்லது ஒரு தனித்துவ இனமாக சுயநிர்ணயத்துடன் பயனைக்கப்போகிறார்களா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தந்தை செல்வநாயகம் அவர்கள் மிகவும் தீர்க்கதரிசனமாக எவ்வளவு தூரநோக்கு சிந்தனையுடன் அன்று இக்கருத்தை முன்மொழிந்திருக்கிறார் என்று அறியக்கிடைக்கின்றபோது எமக்கு மெய்சிலிர்க்கின்றது.

அவ்வாறே 1951ஆம் ஆண்டு திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சி மாநாட்டில் மட்டக்களப்புக்கு தெற்கே கல்முனையை மையப்படுத்தி முஸ்லிம் அரசு உருவாக வேண்டும் என்கிற தீர்மானத்தை அவர் நிறைவேற்றிருயிருந்தார்.

அக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இன்றைய அம்பாறை மாவட்டம் இருந்தது. அப்போது அம்பாறை என்றறொரு தொகுதி இருக்கவில்லை. அம்பாறை தொடக்கம் சம்மாந்துறை உள்ளிட்ட பெரும்பகுதி கல்முனைத் தொகுதியாகவே இருந்தது. அதனையே அன்று தந்தை செல்வநாயகம் முஸ்லிம்களுக்குரிய பிராந்தியமாக அடையாளப்படுத்தியிருந்தார்.

தந்தை செல்வாவின் வழியிலேயே முஸ்லிம்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி 1981ஆம் ஆண்டு மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியை உருவாக்கினார். அதன் ஊடாக முஸ்லிம் தனி அலகு, கரையோர மாவட்டம் போன்றவற்றை அடைந்து கொள்ள முனைப்புக்காட்டினார். இலங்கை முஸ்லிமகளை அடையாளப்படுத்துவதற்கு ஒரு தனி மாகாணம் அவசியம் என்பதை அஷ்ரப் வலியுறுத்தி வந்தார்.

இன்று மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்வதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவை ஜனாதிபதி கோட்டாபய இதற்காக நியமித்திருக்கிறார். ஆனால் மாகாண சபைகளை ஒழிப்பதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

மாகாண சபைத் தேர்தலே முஸ்லிம் சமூகத்தின் இருப்பைத் தீர்மானிக்கப்போகின்றது. இந்த இருப்பை பாதுகாப்பதற்கு எத்தகைய அரசியல் வியூகங்களை வகுக்கப்போகிறோம் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கூடித் தீர்மானிக்கும்" என்றார்.

3 comments:

  1. ஹாஜி அல்லாஹ்வ நம்புக்கோ.

    ReplyDelete
  2. இது முட்டாள்தனமான வாதம் மாகாணசபை முறை இலங்கைக்கு தேவையற்ற ஒரு அசிங்கம் என்றே கூற வேண்டும் இந்த பதவி பேராசைகளுக்காக இந்த சமூகத்தை குழி தோண்டி புதைத்தது போதும் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லையென்றால் வெகுவிரைவில் நீங்களும் அழிந்து சமூகத்தையும் அழித்துவிடுவீர்கள்

    ReplyDelete
  3. தந்தை எஸ்.ஜே.வி.செல்வாதான் எங்களுக்கு முஸ்லிம்களின் தனித்துவத்தை உணர்த்தியவர். அதற்காக அவருக்கு நன்றி. கிழக்குக்கு ஒரு புதிய தொகுதி கிடைத்தபோது கமுனை தமிழர்பகுதி சொறிக்கல்முனை வீரமுனை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகுதி உருவாக்க வாய்ப்பிருந்தும் சம்மாந்துறை தொகுதியை உருவாக்க செல்வாவின் பிள்ளைகள் கோப்பாய் வன்னியசிங்கம் முன்னின்று உழைத்தார். 1970 பதுகளின் நடுப்பகுதிவரை வலுப்பெற்றிருந்த பாரம்பரிய தமிழ் - முஸ்லிம் நல்லுறவே காரணம்.

    ReplyDelete

Powered by Blogger.