Header Ads



எம்.ஐ.எம்.அமீன், எம்.ஏ.கரீம் ஆகியோருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம்


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்ற பட்டமளிப்பு விழாவின்போது பேராதனைப் பல்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அமீன், விஞ்ஞர்னத்துறை ஓய்வுநிலை பேராசிரியர் எம்.ஏ.கரீம் ஆகியோருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.


1979 இல் ஆரம்ப நிலை விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழக்கத்தில் இணைந்து கொண்ட எம்.ஐ.எம்.அமீன், அரபு இஸ்லாமியக் கற்கைத் துறையின் விரிவுரையாளராக நியமனம் பெற்று ஓரிரு வருடங்களிலேயே (1981) இத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 28 வருடப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியின் பின்னர் 2004 இல் ஓய்வுபெற்ற இவர் தனது துறைசார்ந்து 22 நூல்களை வெளியிட்டுள்ளார்.


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானத்துறைத் தலைவராகக் கடமையாற்றிய பேராசிரியர் எம்.ஏ.கரீம், சுவீடனின் சாமர்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும், மலேஷியாவின் மலாயா பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாற்றியுள்ளார். மலேஷியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு உட்பட பல சர்வதேச மாநாடுகளிலும் பங்குகொண்டுள்ளதோடு பௌதீகவியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.