Header Ads



தனது மலவாயில் கைத்தொலைபேசியை மறைத்து வைத்த கைதி - வைத்தியசாலையில் அனுமதி


சிறை கைதி ஒருவர் தனது மலவாயில் மறைத்து வைக்கப் பட்டிருந்த தொலைப்பேசியை அகற்றத் தேசிய வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தனது மலவாயில் ஒரு கைத்தொலைபேசியை மறைத்து வைத்த கைதி ஒருவரிடமிருந்து அதனைப் பிரித்தெடுப்ப தற்காக குறித்த கைதி வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணை யாளர் துஷார உப்புல்தெனிய நேற்று(22) தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில்,


“குறித்த கைதி சட்டரீதியற்ற முறையில் போதைப் பொருளை தனது உடைமையில் வைத்திருந்த வழக்கு விசாரணைக்காக புதுக்கடை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


முன்னதாக கைதி வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் யாரோ ஒருவரிடமிருந்து பெற்ற கைத் தொலைபேசியை தனது மலவாயில் மறைத்து வைத் துள்ளார்.


இதேவேளை கைதி சில அசௌகரியங்களை வெளிப் படுத்தியுள்ளார். சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரி கள் ஆரம்பத்தில் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்தியர்கள் மூலம் அவரை பரிசோதனைக் குட்படுத் தினர்.


ஆனால் அந்த வைத்தியர்களால் கைதி உடலின் கீழுள்ள மறைவிடப் பகுதியிலிருந்து அந்தப் பொருளை அகற்ற முடியாததால் அவர் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்” என்றார்.


0 Reviews

No comments

Powered by Blogger.