Header Ads



ஹன்சாட் பிரதிப் பணிப்பாளராக லின்னாஸ் நியமனம்


மக்கொனையைச் சேர்ந்த என் எஸ் எம் லின்னாஸ் ஹன்சாட் பிரதீப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாற்ற தொகுதியில் 26 வருட சேவையை பூர்த்தி செய்துள்ள இவருக்கு அண்மையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் பத்திரிகைத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அல் ஹஸனியா மகா வித்தியாலயம் பேருவளை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலயம் கொழும்பு டி எஸ் சேனாநாயக்க வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர் அகில இலங்கை சமாதான நீதிவானாவார். ஆசிரிய தம்பதிகளான மர்ஹூம் சவுக்கத் மற்றும் சித்தி மாஜிதா ஆகியோரின் கனிஷ்ட புதல்வராவார்.


தகவல்

றிக்கான் காலித்

No comments

Powered by Blogger.