Header Ads



அடிப்படைவாதிகளை கைதுசெய்ய முயன்ற போது ஹிஸ்புல்லா, அதாவுல்லா, அமீரலி, பதியூதீன் போன்றோர் எதிர்த்தனர்


எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணத்தில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக அந்த மாகாணத்தின் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் எடிசன் குணசேகர தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


ஹிஸ்புல்லாவுக்கு இருந்த அரச பலம் காரணமாக அவரது இந்த செயற்பாடுகள் சம்பந்தமாக முறைப்பாடு செய்ய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சாதாரண மக்கள் அஞ்சினர்.


கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வந்த அடிப்படைவாத அமைப்புகளின் உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, ஹிஸ்புல்லா, அதாவுல்லா, அமீரலி, பதியூதீன் போன்ற பிரபல அரசியல் தலைவர்கள் அதனை எதிர்த்தனர்.


ஆரம்பத்தில் இந்த அடிப்படைவாத முஸ்லிம் குழுக்கள் ஆயுதங்களுடன் அடிப்படைவாதத்தை பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுத்தன. பின்னர் கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்.


இதற்கு எதிராக சாதாரண மக்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் முறைப்பாடு செய்ய அஞ்சினர் எனவும் எடிசன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. தான் பதவியில் இருக்கும் போது இதை சொல்லாமல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மட்டும் தற்போது கூறுக்கிறீர்கள். முன்பே சொல்லியிருந்தால் இதை தடுத்திருக்கலாமே

    ReplyDelete
  2. If the Security Establishment KNEW that that weapons were being supplied to Fundamentalist groups by any Politician and such weapons were being used by the Fundamentalist groups to spread their messages and also in Criminal activities, why did the Security Personnel wait for complaints from the Public knowing very well that the Public was Scared to make Complaints because of the involvement of the Politicians? Were the Security personnel also scared of Politicians?

    ReplyDelete

Powered by Blogger.