Header Ads



அமெரிக்கர்கள் புனித அல்குர்ஆன் பிரதிகளை, வாங்கிச் செல்லும் காட்சி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், முஸ்லிம் அல்லாத பலரும் திருகுர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பை படிப்பதற்காக விரும்பி  வாங்கி செல்லும் காட்சி. 


இறைவன் அவர்களை சத்தியத்தை நோக்கி அழைத்து வர பிரார்திப்போம். 


உலகில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே கொள்கை இஸ்லாம் மட்டுமே. பாரின்அபேர்ஸ் அமெரிக்க பத்திரிகை தகவல்.





3 comments:

  1. வுழூவுடன் முஸ்லிம்களைத்தவிர யாரும் குர்ஆனை தொடக்கூடாது என்பதுதானே உலமாக்களின் கூற்று அவ்வாறெனின் இந்த செயற்பாட்டை எவ்வாறு அவர்கள் பார்கிறார்கள், ஒரு உலமாவின் பதிலுக்காக .....

    ReplyDelete
  2. அல்குர்ஆன் يااليها الناس என பல்வேறு இடங்களில் பொதுமக்களை விளித்து பேசுகின்றது. அதன் தூது உலக மக்கள் அனைவருக்கும் உரியது. அதுமட்டுமன்றி உலகமக்களே, இந்த அல்குர்ஆனில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் அதில் உள்ள ஒரு வசனத்தையேனும் உருவாக்குங்கள். அதற்காக அல்லாஹ்வையும் அவனடைய தூதரையும் தவிர வேறு உலகில் உள்ள அனைவரையும் உதவிக்காக அழையுங்கள். அவ்வாறு முயற்சி செய்தும் உங்களுக்கு முடியாவிட்டால் உலகம் முடியும் வரை அது சாத்தியமாகாது என உலக மாந்தர்களுக்கு அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே சவால் வி்டுத்துள்ளது. எனவே அந்த சவாலுக்கு இன்றும் யார் விரும்பினாலும் அதனை முறியடிக்க முயற்சி செய்யலாம். எனவே அததகைய பொதுப்படையான நூலை முஸ்லிம் அல்லாத யாருக்கும் நீங்கள் வுழு எடுத்துக்கொண்டுதான் அதைப்பார்க்க வேண்டும் எனக்கூறினால் அது புத்திக்குப் பொருந்துமா. எனவே, யார்விரும்பினாலும் அதைப் பார்க்கவும் வாசிக்கவும் ஆய்வு செய்யவும் முடியும் என்பது தான் பகுத்தறிவுக்குப் பொருததமாக இருக்கும். முஸ்லிம்கள் அதை வாசிக்க, ஆராய தொடங்கினால் வுழு எடுக்க வேண்டும் என்பது நபிமொழியாக இருந்தால் அதை நாம் பின்பற்ற வேண்டும். இதே விடயத்தை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நாம் என்ன காரணம் கொண்டும் போதிக்க முயலக்கூடாது.

    ReplyDelete
  3. 'நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.'

    “நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது). 
    (அல்குர்ஆன் : 27: 30 - 31)

    பல்கீஸ் ராணிக்கு இறைத்தூதர் மன்னர் சுலைமான் (King Solomon) அவர்களிடம் இருந்து சென்ற இறை அழைப்புக் கடிதம் பற்றி மேல் உள்ள குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன.

    பல்கீஸ் ராணி இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே இறை வசனங்கள் அவரை இஸ்லாத்தில் இணைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இதன் அடிப்படையிலும் Professional Translation Service சகோதரரின் கருத்து ஊர்ஜிதமாகிறது.

    ReplyDelete

Powered by Blogger.