Header Ads



மாடறுப்பு தடையும், பாராளுமன்ற உறுப்பினர்களும்..!!


மாடுகள் அறுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று உருவாக்கப்பட்டது அல்ல. காலத்துக்கு காலம் பெரும் சமூகத்தை சேர்ந்த சிலரால் உருவாக்கப் படுகின்றன ஒரு பிரச்சாரம். அன்றைய ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் மதங்களைப் போதிக்கின்றவர்களால் இதே பிரச்சினை முன்மொழிவு செய்யப்பட்ட போது அதை மிகவும் சிறந்த முறையில் கையாண்டு அதே கணப்பொழுதில் அதற்கு முற்றுப் புள்ளியும் வைத்தார்.

இதே கோசம் 2013 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட போது அதை சரியான முறையில் கையாண்டிருந்தால் இன்றைய இந்த திட்டத்திற்கு (Proposal) அவசியம் ஏற்பட்டிருக்காது. 

இன்றைய பிரதமரும் அவருடைய அரசாங்கமும் மனதளவில் இதைச் செய்ய வேண்டும் என்று செய்வதாக தெரியவில்லை மாறாக அவர்களுடைய செல்வாக்கை பெரும் சமூகத்தின் மத்தியில் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான செயலாகத்தான் தெரிகிறது. 

இன்று பெரும் சமூகத்தை சேர்ந்த நிறைய சகோதரர்கள் இதன் நியாயமற்ற தன்மையையும் இதனால் இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் வர இருக்கும் பாதிப்பையும் பற்றி பேசுகிறார்கள் எழுதுகிறார்கள். இதன் தாக்கமோ தெரியவில்லை மாடு அறுப்பதற்கு எதிரான இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒரு மாதகாலத்திற்கு பிற்போட்டுள்ளது என்று  அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல 10/09/2020 அன்று தெரிவித்துள்ளார். 

இதன் பின்னணி நமது சமூகத்தை வைத்து செய்யும் அரசியலாக இருந்தாலும், இதை சட்டமாக மாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன பொழுது நம் தலைமைகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாக இருந்து அவர்களுடைய நியாயமற்ற காரணங்களை ஏற்றுக் கொள்ளாமலும், அதேநேரம் இது நமது சமூகத்திற்கு உரிய பிரச்சினையாக மட்டும் அடையாளப் படுத்திக் கொள்ளாமலும், இது இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வாறு பாதிப்பைக் கொண்டுவரும் என்ற தொணியில் விவாதத்தில் பங்கேற்க வேண்டும். அதேபோன்று பாராளுமன்றத்திற்கு வேளியேறும் பேணவேண்டும். இவற்றை செய்வதன் மூலம் அரசாங்கத்தின் மீது உள்ள பெரும் சமூகத்தின் அழுத்தத்தை ஓரளவு குறைப்பதுடன் நமது சமூகத்தின் மீது உள்ள பிழையான அபிப்பிராயத்தையும் களைவதற்கு உதவி புரியும்.

இந்தத் தடையுத்தரவு இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திலும் எவ்வாறு பாதிப்பை உண்டுபண்ணும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

இதில் நேரடியாக உள்வாங்கப்பட்டு தொழில் புரிபவர்கள், இது சார்ந்த தொழில்  செய்கின்றவர்களுக்கான மாற்றுவழி என்னவென்று ஆராயப்பட வேண்டும். 

மனிதனுக்கு தேவையான சமநிலையான உணவிற்கு (Balance diet) புரதம் இன்றியமையாதது. Fresh beef (புதிய இறைச்சி) எனப்படுவது போதுமான அளவு proteins, vitamins and minerals (rich in Iron) என்பவற்றைக் கொண்டுள்ள அன்றாடம் இலகுவாகவும் சாதாரண விலையிலும் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். மீன்கள் எல்லாக் காலங்களிலும், எல்லாப் பகுதிகளிலும் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஆட்டிறைச்சி எல்லா வகையான இறைச்சிகளைவிடவும் சிறந்தது என்று விஞ்ஞானம் கூறினாலும் மாட்டிறைச்சியை மாற்றீடு செய்யும் அளவிற்கு நமது நாட்டில் உற்பத்தி இல்லை அதேபோன்று அதன் விலையை தாங்கும் அளவிற்கு எமது மக்களுக்கு சக்தியும் இல்லை. இன்று இலகுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் கோழி இறைச்சியில் (Broiler Chicken) அதிகளவில் Harmful Chemicals, Growth Hormones and Antibiotics காணப்படுவதால் கூடுதலாக அதை உணவில் சேர்த்துக் கொள்ளுவதில் சுகாதார சிக்கல்கள் காணப்படுகின்றன.  மாடுகள் அறுப்பதற்கு தடைவிதிக்க முன்பாக அதற்கான மாற்று வழிமுறைகள், அதன் சாதகம் பாதகம் பற்றி அரசாங்கம் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று பேசப்பட வேண்டும். 

இறைச்சியை இறக்குமதி செய்யும் போது இலங்கை செலாவணி வெளிநாடுகளுக்கு செல்கின்ற போது அது எமது பொருளாதாரத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும், frozen (உறைந்த) இறைச்சியை உண்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளைப் பற்றி மருத்துவர்களின் கருத்துக்கள் என்ன என்பதைப் பற்றியும் மக்களுக்கு அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும், அதேபோன்று நகரங்களில் உறைந்த இறைச்சியை (frozen beef) விற்பனை செய்தாலும் கிராமங்களில் விற்பனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் (Super Markets with storage facility) உள்ளனவா என்று உறுதிப் படுத்தும் படி கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.

மாடுகளின் பெருக்கத்தால் சூழல் சமநிலை பாதிப்பதோடு பாறைகளில் ஏற்படக் கூடிய வாகன நெரிசல் களையும், விபத்துக்களையும் தடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பால் பொருட்கள் உற்பத்திக்காக (Diary product) மாடுகளை பயன்படுத்தும் தொழிலாளிகள் அதன் உற்பத்தி குறையும் இடத்து அந்த மாடுகளை எவ்வாறு பராமரிப்பது அல்லது எவ்வாறு அப்புறப் படுத்துவது (dispose) என்ற பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். 

இதன் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான வருமானம் குறைவடையும், இதன் காரணமாக உள்ளூராட்சி சபையினூடாக செய்யப்படுகின்ற அபிவிருத்திகள் பாதிப்படையும். இதற்காக மாற்று வழியை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

மாடுகள் அறுப்பதற்கு எதிரான சட்டத்தை கொண்டு வர முன் இது சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் அனைத்துக்குமான தீர்வுகளை அரசாங்கம் என்ற முறையில் ஆராய்ந்து அதற்குரிய திட்டங்களை தீட்டி வெற்றி பெற்றதன் பிற்பாடு இதனை முன்னெடுக்க வேண்டும் என்ற செய்தியை கூறவேண்டும்.

ஏனென்றால் மீண்டும் அவர்கள் கொண்டு வந்த சட்டத்தை இல்லாமல் செய்கின்ற பொழுது எங்களை வைத்து அவர்கள் செய்கின்ற அரசியலையும் நாங்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றாகவும் எந்தக் கஷ்டங்களும் இல்லாமலும் வாழவேண்டும் என்று நினைத்து செய்கின்ற அரசியலையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

எங்களை நோக்கி எவ்வாறான பிரச்சினைகள் வந்தாலும் அதன் மூலம் நாங்கள் எங்களை தனிமைப் படுத்திக் கொள்ளாமலும், உணர்வுகளை தூண்டி அரசியல் செய்யாமல் அறிவுக்கு முன்னுரிமை வழங்கி செயல் படும் போது வெற்றி நிச்சயம் எங்களுடையதே. 

Dr. Anpudeen Yoonus Lebbe


1 comment:

  1. காலத்தின் தேவையறிந்த அருமையான ஆக்கம்

    ReplyDelete

Powered by Blogger.