Header Ads



சஜித் அணிக்கு எதிராக அஷாத் சாலி சீற்றம், அதாஉல்லாவுக்கு எதிரான செயற்பாட்டுக்கும் கண்டிப்பு


தேசிய காங்கிரஸ் தலைவரின் பாராளுமன்ற உடை தொடர்பில், சந்தர்ப்பம் பார்த்து கூச்சலிட்டதால், சிலரின் இனவாத உளக் கிடக்கைகளை உலகம் அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்தார். 


பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி, ஆடையணிந்து வந்ததாக தேசிய காங்கிரஸ் தலைவர் மீது எதிர்க்கணைகள் தொடுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், சபாநாயகரின் அனுமதியுடன் மீண்டும் அதே உடுப்புடன் அதாஉல்லா பாராளுமன்றம் வந்து அமர்ந்ததில், பல படிப்பினைகள் உள்ளதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


"தேசிய காங்கிரஸ் தலைவரின் ஆடையைப் பார்த்து "அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ், இஸ்லாமிய அடிப்படைவாதி" எனக் கூச்சலிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், அரசியல் நோக்கிலே செயற்பட்டுள்ளனர். அதாஉல்லாவின் ஆடையில் அடிப்படைவாதம், பயங்கரவாதச் சாயல் இருந்திருந்தால், மீண்டும் அந்த ஆடையுடன் சபைக்கு வருவதற்கு சபாநாயகரின் அனுமதி கிடைத்திருக்காது. நடைமுறையில் சில தவறுகள் இருந்ததாலே அவர் வௌியேற்றப்பட்டு, மீண்டும் சபைக்குள் அனுமதிக்கப்பட்டார். இதைக் கூடப் பொறுத்துக்கொள்ளும் மனவளர்ச்சி சஜித் பிரேமதாச தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு இல்லாமல் போனமை கவலையளிக்கிறது. 


ஒரு தவறைக் கண்டிப்பதற்கு எம்.பிக்களுக்கு உரிமை உள்ளதுதான். எனினும், எதிர்க்கட்சி எம்.பிக்கள், அதாஉல்லாவுக்கு எதிராகப் பிரயோகித்த சொற்கணைகள், வங்குரோத்து அரசியலுக்கு வயிறு வளர்க்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன். சிறுபான்மைச் சமூகங்களை பெருந்தேசியத்தின் எதிரிகளாகக் காட்டி, ராஜபக்ஷக்கள் வெற்றியடைந்த வியூகத்தை, தற்போது வங்குரோத்திலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் கையிலெடுத்துள்ளது.


முஸ்லிம் தனித்துவ தலைமைகளும், எம்.பிக்களும் இணைந்து, பயங்கரவாதச் சாயலுக்கு பக்கவாத்தியம் ஊதியதுதான் இதிலுள்ள மிகப் பெரிய கவலை. ஒரு காலத்தில் இவர்களையும் ஒதுக்கிவிட்டு, ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற சஜித் தலைமையிலான அணி முயற்சிக்கலாம். மேலும், சந்தர்ப்பம் பார்த்து இத் தலைமைகளுக்கும் சஜித் அணி, பயங்கரவாதச் சாயம் பூசாது என்பதற்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. இதைத்தான் எதிர்க்கட்சியினரின் கூக்குரல்களும் குற்றச்சாட்டுக்களும் தௌிவுபடுத்துகின்றன. 


எனவே, ஆளும் தரப்பால் ஒதுக்கி, தனிமைப்படுத்தப்படுள்ள முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள், இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கத்தைக் கைவிட்டு, சமூக நோக்கில் செயற்படுவதுதான், அரசியலுக்காக எமது சமூகத்தை ஒதுக்கும் தரங்கெட்ட அரசியலை இல்லாதொழிக்க வழிசமைக்கும்" என்றும் அஷாத் சாலி தெரிவித்துள்ளார். 

7 comments:

  1. அதுதான் உண்மை அசாத் சாலி அவர்களே!...
    மஹிந்த கூட்டணியில் உள்ள இனவாதிகளை விடவும் "சஜித்"தும் "சம்பிக்கவும்" பயங்கரமான முஸ்லீம் விரோதிகள் என்பதை அவர்களோடு ஒட்டிக்கொண்டுள்ள எமது அரசியல் "தலைமைகள்(?)" புரியாதவர்களா? இல்லையே! தமது சுயநல அரசியலே அவர்களது நோக்கம்! இது தெரியாத புண்ணாக்குகள் தான் அவர்கள் பின்னாலுள்ள எமது "மக்குகள்!

    ReplyDelete
  2. சரியான கருத்து. ஆனால் அத்தா தன் உயிருக்கு நிகராக நினைக்கும் அரசாங்கம் பக்கமிருக்கும் எந்த சிங்கள இனவாத அரசியல்வாதிகளும் குரல்கொடுக்கவில்லை என்பதை அத்தா உணரவேண்டும்

    ReplyDelete
  3. வேறு என்னத்தங்க சொல்ல, செய்ய சொல்றீங்க. அசாத் சாலி நாநாட கடைசிப் பந்தியைப் பாத்தீங்களா. முஸ்லீம்கள அடிச்சி நொறுக்கனும்னு இனவாதிகள் துடிச்சிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில முஸ்லீம்களின் ஒற்றுமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்காமல் நீங்களும் போய் சேர்ந்து கூக்குரல் இடுவது நியாயமா? இப்பிடி எல்லாம் மனசாட்சிக்கு மாறாக போரதால்த்தான் வன்னியிலும திகாமடுல்லவிலும் அல்லாஹ் உங்களுக்கு தோல்வியக் காட்டினதுமில்லாமல் தேசியப்ப்பட்டியல் கிடைக்காமலும் ஆக்கிப் போட்டான். கவனமா இருங்கப்பா.

    ReplyDelete
  4. Mr. Azath Sally, you see the protests by the SJB MPs in Parliament against the attire of Athaullah MP as Communally oriented. I am not too sure and I have no idea how many in the community will see it the way you see it.

    But, there is the clear cut case of the Reprehensible, Abominable Harassment of a Muslim lady at Lanka Mineral Sands Ltd. which is Fully Owned by the Government. She was working for about 6 years in their Pulmoddai Office, Trincomalee District. In addition to being a Graduate of the Peradeniya University, she has also Graduated from an Arabic College as an Aalimah. Naturally, she was wearing Islamic Dress to Office throughout and suddenly, the company imposed a dress code for female employees after the change of Govt. end of last year, requiring them to wear Saree to Office which the lady concerned refused to comply. For this, she has been Penalised in various ways and Finally she was Forced to resign. She was widowed in 2015 and she was forced to work to feed her three children. Now, she has No means of livelihood and it is not clear how she is able to feed her children and herself.

    Sunday September 20th edition of Jaffnamuslim.com carries an article about this lady.

    Mr. Azath Sally, don't you think that this lady has been severely Victimised ONLY Because she is a Muslim and wanted to exercise her Fundamental Right to wear the Islamic Dress and she is a Pathetic Victim of Crass Communalism and Racism? Don't you think that she Deserves the Unstinted Support from the Entire Community and, more so, from Leaders like you? And let's not Forget that Taking up her cause is NOT just helping a victimised individual but Standing up to Perverted Racism and sending a Strong Message to the Heartless Racists that the Community will NOT Surrender to Racism and will ALWAYS Fight Back.

    Here is hoping that you will take up this poor Lady's Cause which is Really a Cause of the Community.

    ReplyDelete
  5. Well said by Muhandiram. Please consider this too.

    ReplyDelete
  6. The news of this lady's pathetic situation must be taken seriously.Especially the politicians.The politicians never came up with Islamic teaching to protest or give awareness about the Islamic dress or halal/ haram issue in parliament.Their only idea is to enjoy the privileges and amash assets.These type of harassment to Muslim women taken place very often.Asath Salih instead of speaking on behalf of Athaullah must raise about the poor lady.

    ReplyDelete
  7. மிகவும் கவலையாக இருக்கு. அதாவுல்லா அவர்கள் வெளியே சென்றபோது மலையக தமிழ் உறுப்பினர் ஒருவர் துணையாகச் சென்றார். அது மிக முக்கியமான சித்திரம். தமிழர் மலையகத்தமிழர் ஐக்கியமும் அமைப்பு ரீதியாக கட்சியில் கூட்டணியில் உறுதியாக இருப்பதும் அவசியம். 1970களுக்குமுன் நிலமை அப்படித்தானே இருந்தது.

    ReplyDelete

Powered by Blogger.