Header Ads



"ஜம்மியதுல் உலமா மீதோ, உலமாக்கள் மீதோ கலங்கம் ஏற்படுத்தி விடக் கூடாது"



அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பதில் பொதுச் செயலாளர் ஷெய்க் முர்ஷித் முளஃப்பர் சட்டத்தரணியுடன் சாட்சியமளிக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான போது தனது கையடக்க தொலைபேசியை எடுத்துச் சென்றமை, சட்டத்தரணியிடம் ஒப்படைத்து சாட்சியங்களை ஒலிப்பதிவு செய்தமை தனது அறியாமை காரணமாக இடம்பெற்ற தவறு என ஏற்றுக் கொண்டு விசாரணைகள் நிறைவுறும் வரை தனது பதவியை இராஜினாமாச் செய்தமையை வரவேற்கிறேன்.

கடந்த பல மாதங்களாக ஜனாதிபதி ஆணைக்குழு பொலிஸ் பிரிவில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற பொழுது கையடக்க தொலைபேசியை வைத்திருக்க அனுமதி வழங்கப் பட்டிருந்ததமையாலும், ஆணைக்குழு நடவடிக்கைகளை ஊடகவியலாளர்கள் பதிவு செய்து கொண்டிருந்ததாலும் தாம் அதனை பதிவு செய்வதில் தவறில்லை என்ற எண்ணத்திலும் தொடர்ந்தும் தம்மைத் போதிய தயார் படுத்தலுடன் அடுத்தடுத்த அமர்வுகளுக்கு ஆஜராகவுமென அவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என அறிய வருகிறது.

பிரதான சட்டத்தரணியிடமன்றி உதவிக்குச் சென்ற இளம் சட்டத்தரணியிடம் தனது கையடக்க தொலைபேசியை ஒழிவு மறைவின்றி பதிவு செய்யும் நோக்கத்திலேயே ஒப்படைத்ததாககவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

உண்மையில் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்க அனுமதியில்லை என்ற அறிவுறுத்தலை அல்லது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளை தான் அல்லது குறித்த சட்டத்ததரணி அறிந்திருக்க வில்லை என்று நீதிமன்றில் நியாயம் கற்பிக்க முடியாது என்பதனை அறிவோம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கை அவர்களுக்கு பாதகமில்லாமல் அறிவுறுத்தல் அல்லது எச்சரிக்கையுடன் நிறைவிற்கு வர பிரார்தித்துக் கொள்வோம்.

இந்த நாட்டின் மீதான தேசப்பற்று, நீதித்துறையை சட்டம் ஒழுங்கை மதித்து நடத்தல் குறித்து அதிகமதிகம் வலியுறுத்தி வழிகாட்டும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மீதோ கண்ணியமிக்க உலமாக்கள் மீதோ மேற்படி துரதிஷ்ட வசமான நிகழ்வு கலங்கம் ஏற்படுத்தி விடக் கூடாது எனவும் எதிர்பார்க்கின்றேன்.

குறிப்பாக வரலாற்றில் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை கடந்து செல்லும் நாம் தீய சக்திகள் மற்றும் ஊடக கூலிப்படைகளின் இடையறாத விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் சிவில் சன்மார்க்கத் தலைமைகளை மதித்து பார்வையாளர்களாக அன்றி அவர்களது தன்னார்வத் தொண்டுகளில் பணிகளில் பங்காளர்களாக எம்மையும் இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

6 comments:

  1. சட்டம் தெறியாாாாத பொரம்போக்குகல
    எதுக்கு உலமாசபைல வச்சி இருக்கீங்க
    முஸ்லீம்களின் மூதுகெழும்பான இந்த சபைல இப்படி ஒரு அசிங்கத்தபன்னி முழு சமுதாாாயத்தையுமே கேவலப்படுத்திவிட்டு இப்பொழுது கதை பேசுரான்கள் பொரம்போக்குகள்

    ReplyDelete
  2. எங்கே என்று பார்துக்கொண்டிருக்கும் 'மேதாவிகள்' தயவுசெய்து பொறுமையாக இருங்கள். வீணான அபிப்பிராயங்கள் மூலம் குட்டையைக் குழப்பி எதிரிகளின் - உதிரிகளின் கும்மாளத்துக்கு வழிசமைத்துவிடாதீர்கள்!

    ReplyDelete
  3. கடந்த வாரம் மன்னாரில் இருந்து வந்த தமிழ் பெண் புத்தரின் உருவம் பதித்த சேலையையைக் கட்டியிருந்த சமயத்தில் நராஹேன்பிட்டியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அந்த பெண் கைது செய்யப்படும்வரைக்கும் ஒரு தமிழ் முட்டாளுக்க்குக்கூட அந்தப் பெண் செய்வது தவறு என்று சொல்ல தோன்றவில்லை என்பது அதிற்ச்சியாக இருக்கு. படத்தைப் பார்க்க எனக்கு கோவம் வந்தது. ஆணைக்குழுவில் ஞானசாரதேரரின் சாட்சியத்தை பதிவு செய்தமையும் இதுபோன்ற ஒரு பொறுப்பற்ற முட்டள்தனமான செய்கைதான். ஞானசாரர் யார் என்பது எல்லா முஸ்லிம்களுக்கும் தெரிந்ததுதான். உரிமைப்போர் வேறு. ஒரு இனத்தை சீண்டுவது வேறு. இன முறுகல் உள்ள ஒரு நாட்டில் பொறுப்புடன் வாழ தமிழ் பேசும் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

    ReplyDelete
  4. Allah Subhanahuthala always with us

    ReplyDelete
  5. Unmayana vidayam thawaru eanbathu manithanal natakka kodiyathu
    Athai vimarsikkamal avarkalukka dua seaivom avar wendumede seaiwilla.

    ReplyDelete
  6. இவர்களை போன்ற அடி முட்டால்கள் முஸ்லிம்களின் மார்க்க உரிமைகளை கையாளும் ஒரு உயர்ந்த சபையில் முக்கியமான பொறுப்புக்களில் எந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள்?
    இவர்களைப்போன்ற முட்டால்கல் நிரம்பிய சபையாக இருப்பதால் தான் எமது சமூகத்துக்கு எதிராக எழும் பிரச்சனைகளை இந்த சபையால் நேர்த்தியாக கையாள முடிவதில்லை.

    சகோதரர் மஸிஹுதீன் போன்று இன்னும் பலர் இவர்களை போன்ற அடி முட்டால்களின் தவரை நியாயப்படுத்த முயற்சிப்பது இவர்களும் அந்த கூட்டத்தினரில் ஒருவர் என்பதனாலாகும்.

    ReplyDelete

Powered by Blogger.