Header Ads



பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், ஆணுறுப்பு அகற்றப்படும் - அதிரடி சட்டம் கொண்டு வந்த நாடு


பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு பிறப்புறுப்பு அகற்றப்படும் என்ற அதிரடி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று, இந்த கொரோனா காலகட்டத்தில் அங்கு பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்ததால், அரசுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 800 பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், தற்போது அந்நாட்டு அரசு, பாலியல் குற்றங்களை குறைப்பதற்காக, அதற்கான சட்டங்களை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து, நைஜீரியாவின் கடுனா மாநில ஆளுநர் நசீர் அகமது கூறுகையில், நம் நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உருவாகும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கவே தற்போது புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டதுள்ளது.

இதற்கு முன் சட்டப்படி, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுவர் சிறுமிகளை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்துவோருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது

தற்போது அந்த சட்டமானது தற்போது மாற்றப்பட்டுள்ளது.

புதிய சட்டப்படி கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடும் ஆண்களின் பிறப்புறுப்பு குழாய் அகற்றப்படும் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

மேலும் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் பெண்களின் கருப்பை குழாய் அகற்றப்படும். நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வnகொடுமைகளில் இருந்து பாதுகாக்க இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த தண்டனை அறிவிப்பு குற்றவாளிகளிடையே கலக்கத்தையும், பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.