Header Ads



இலங்கையில் ஹோட்டலில் தங்கியிருந்த, வெளிநாட்டவருக்கு கொரோனா


மாத்தறை - பொல்ஹேன பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

இந்த நபர் உட்பட ரஷ்ய நாட்டவர்கள் 15 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி மத்தல விமான நிலையம் ஊடாக இலங்கை வந்து குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.

அவர்கள் இன்றைய தினம் ரஷ்யா திரும்பவிருந்த நிலையில் மாத்தறை நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் போது ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் மற்றைய நபர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்றவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த ரஷ்ய நாட்டவர்கள் குழுவில் மூவர் மாத்தறை வர்த்தக நிலையங்களுக்கு நேற்றைய தினம் முச்சக்கர வண்டியில் வருகைத்தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ரஷ்ய நாட்டவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த ஹோட்டலின் 23 பேர் தனது வீடுகளுக்கு சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் குடும்பத்தினர் உட்பட ஊழியர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளமை தொடர்பில் தகவல் சேகரித்து வருவதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.