Header Ads



வலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்


(லியோ நிரோஷ தர்ஷன்)

மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள்  அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன. 

இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்துள்ள நிலையில் குறித்த மூன்று கட்சிகளும் ஆளும் கட்சியுடன் இணைய உள்ளன. 

இதன்போது ஆளும் கட்சியில் பெற்றுக்கொள்ள கூடிய பதவி நிலைகள் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. 

மேலும் கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசிர்வாதத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியள்ள அந்த கட்சிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் முதலில் இணைய உள்ளனர். 

மறுபுறம் 28 இராஜாங்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களிலும் திடீர் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

தற்போதுள்ள அமைச்சுக்களுக்குரிய நிறுவனங்கள் மற்றும் விடயதானங்களிலேயே இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளது. 

இதன் போது அமைச்சுக்குரிய நிறுவனங்களில் மாற்றங்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளில் பெயர் மாற்றங்கள் என இடம்பெறலாம் கூறப்படுகிறது. 

இந்த மாற்றங்கள் இரு வாரங்களுக்குள் இடம்பெறும் என்றே கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ள குறித்த மூன்று சிறுபான்மை கட்சிகளுக்கான பதவிகள் குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

குறுகிய காலத்திற்கு குறித்த மூன்று கட்சிகளின் தலைவர்கள் எவ்விதமான அமைச்சுக்களை முதலில் பெற்றுக்கொள்ளாமலிருக்கவும் தீர்மானித்துள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள  கட்சியின் 2 ஆம் நிலை தலைவர்கள் ஏற்படவுள்ள மாற்றங்களின் போது உள்வாங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 comments:

  1. VAAKALITHA SHAMUTHAYAM, EKKEDU KETTAALUM, AMAICHU PATHAVIKAL ILLAAMAL
    IVANUKALUKKU VAALAVEY MUDIATHU.
    PAAVAM,MUTTAAL MUSLIMGAL IVANUKALUKKAU
    EMAANDUKONDEY IRUKKIRARKAL.

    ReplyDelete
  2. (முஸ்லிம்) மக்களின் தலையினை கடவுள் மிளகாய் அரைப்பதற்கு ஏதுவாகவே படைத்துள்ளான் என்பது அதனை (முஸ்லிம்களின் அரசியல் சூழ்நிலைகளை) ஆராய்பவரகளுக்கு நன்கு புரியும். ஆயினும் மிகப் பலரின் தலைகளில் மயிர் இருப்பதனால் அதில் மிளகாயினை அரைப்பதற்கு முடியாமலும் போகலாம். அரசியல் என்பது போட்டிதான். பதவிகள்தான் அங்கு பேரிடத்தை வகிக்கின்றன. சிங்கள புத்திஜீவிகளிடையேயும் சாதாரண மக்களிடமும் (முஸ்லிம்) சமூகம் இழிவாகப் பார்க்கப்படுவதற்கும் இதுவே காரணமாகலாம். விபச்சாரம் செய்வதற்கும் கால நேரம் உண்டு. எல்லா நேரங்களும் காலமும் அதற்குத் துணைவராது.

    ReplyDelete
  3. What a SHAMELESS and DISGUSTING Lot are these fellows. This Govt. has Openly and Brazenly displayed its Hostility towards the Muslims and these DEPRAVED fellows want to DESERT the Main Opposition Party that they allied with and contested the Election less than 2 months back.

    Don't they Understand that they are Not only BETRAYING the Community and those who voted for them but also the Country by lending support to the 20A about which even those in the Govt. and others who support the Govt. have Serious Reservations? DAMN Them.

    ReplyDelete
  4. இதுவும் நல்லது தான் ஏகபோக
    உரிமை ஓரளவு மட்டுப்படலாம்

    ReplyDelete

Powered by Blogger.