Header Ads



நாமலின் புதிய திட்டம், மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும்


இளைஞர் விவகார அமைச்சரான நாமால் ராஜபக்ஷ இளைஞர் விவகார அமைச்சை உலக வர்த்தக மையத்திலிருந்து கொழும்பில் உள்ள சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் மாதந்தம் 3.9 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என அமைச்சர் நாமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 2021 மார்ச் மாதம் உலக வர்த்தக மையத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்தவுடன் அமைச்சை சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற்றுமாறு அமைச்சர் நமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

No comments

Powered by Blogger.