Header Ads



20 ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு, கிடைக்கவுள்ள முக்கிய அதிகாரங்கள்


அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று காலை 20ஆம் திருத்தச் சட்டமூல வரைபானது அரச அச்சக திணைக்களத்திற்கு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் திருத்தத்திற்கு உள்ளான முக்கிய விடயங்கள்...

19வது திருத்தத்தில் அதிகபட்சமாக 30 கபினற் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே இருக்க முடியும் என்ற சரத்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 20வது திருத்தத்தில் இருந்து நீக்கப்பட்டு எத்தனை அமைச்சர்களையும் நியமிப்பதற்கு அமைச்சரவைத் தலைவரிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக இருப்பவர் எந்த அமைச்சையும் தன் வசம் கொண்டிருக்க முடியாது எனும் 19வதுதிருத்த சரத்தும் நீக்கப்பட்டு ஜனாதிபதி எத்தனை அமைச்சுக்களையும் நிறுவனங்களையும் தமக்கு கீழ் கொண்டிருக்கலாம் என்ற முக்கிய சரத்து 20வது திருத்தத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அவற்றுடன் 20வது திருத்தத்தில் சுயாதீன குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை நேரடியாக நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நடைமுறைப்பாராளுமன்றம் அதன் அவதானிப்புக்களை மாத்திரமே அனுப்பிவைக்கமுடியும் .

சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கும் ஆட்களை நியமிப்பதற்கான அதிகாரமும் 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Each leader looking the fully 🔋power to run the country.
    It is normal in the present globe.
    But god limited everything .
    .but almighty only having fully power

    ReplyDelete
  2. மூன்றில் இரண்டு கிடைத்து அடுத்த மாதமே, சர்வாதிகார அரசின் பலம் மேலோங்கிவிட்டது. இனி இந்த நாட்டு மக்களின் வாய்க்குப்பூட்டு,காதுகள் இரண்டும் சக்திவாய்ந்த பொருட்களால் அடைக்கப்பட்டுவிட்டது,கண்கள் குருடாக்கப்பட்டுவிட்டன. இனி இந்த நாட்டு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு இனி பலன் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. மௌனியாக குருடனாக, செவிடனாக இருப்போம்.

    ReplyDelete
  3. இதுவரை பேசிய இனவாதம் சிங்கள மக்களைப் பலப்படுத்தவல்ல இராசபட்ச குடும்பத்தைப் பலப்படுத்தவே என்பது அம்பலமாகியுள்ளது. இனி காசிஅப்பனும் தம்பியும் சிகிரியாவுக்கு மோதியதுபோல அண்ணன்
    தம்பி ராஜபக்சக்கள் கொழுபு அதிகாரத்துக்கு மோதும்போதுதான் விடிவு ஏற்படுமோ? இந்த முறை எந்த வெளிநாட்டிடம் போவார்களோ?

    ReplyDelete

Powered by Blogger.