Header Ads



20 ஆவது சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம், சட்டமா அதிபர் பச்சைக்கொடி, 19 இல் 4 விடயங்கள் நீடிக்கும்


(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின்  20 ஆவது சட்டமூல   வரைபிற்கும்,  வரைபினை  வர்த்தமானியில் வெளியிடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.     

19ம் திருத்தத்தில்   பிரதான விடயங்களாக  காணப்பட்ட     ஜனாதிபதியின் பதவி காலம்,   பாராளுமன்றத்தின் பதவி காலம், மற்றும்  தகவலறியும் உரிமை சட்டம், ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய     விடயங்கள் அனைத்தையும்   நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கான  மூலவரைபு   நீதியமைச்சரினால்  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில்  சமர்ப்பிக்கப்பட்டது.  

 சட்ட மூலவரைபிற்கு  அமைச்சரவை   ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அமைச்சரவையில்    அங்கீகாரம் பெற்ற   சட்ட மூல வரைபினை வர்த்தமானியில் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.

 அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில்   ஜனாதிபதி மற்றும்  பாராளுமன்றத்தின் பதவி காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டது. அத்துடன் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாத என்றும்  மட்டுப்பாடு  விதிக்கப்பட்டன.  தகவலறியும் உரிமை  சட்டம்    வலுப்படுத்தப்பட்டது.

இவ்விடயங்களை   அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முழுமையாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி  குறிப்பிட்டுள்ளதற்கு அமைய அவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.      சட்ட மூல வரைபு தொடர்பான உபகுழுவினரால் தயாரிக்கப்பட்ட சட்ட மூல வரைபு  சட்டமாதிபருக்கு  சமர்ப்பிக்கப்பட்டு   சட்ட மூலவரைபு பரிசீலனை செய்யப்பட்டது.


 அரசியலமைப்பின் 83 ஆவது பிரிவிற்கு அமைய    பொதுஜன  வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய   விடயங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்பட்ட  சட்டமூல வரைபில் குறிப்பிடப்படவில்லை.


 அதாவது ஜனாதிபதி, பாராளுமன்றம் ஆகியவற்றின் பதவி காலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு  நடத்துவது அவசியம்.    


ஆகவே   அரசியலமைப்பின் 83வது உப பிரிவுக்கு அமைய    பாராளுமன்றத்தின்  மூன்றில் இர்ணடு பெரும்பான்மையுடன்   20வது சட்ட  மூல வரைபு     நிறைவேற்றப்பட வேண்டும் என சட்டமாதிபர்   நீதியமைச்சின் செயலாளருக்கு    ஆலோசனை வழங்கினார் .


  இதனை   தொடர்ந்து    அமைச்சரவையில் நீதியமைச்சரினால்   சட்டமூல வரைபு  சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  20வது  அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான சட்டமூல வரைபு   இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இம்மாதமே  நிறைவேறறிக் கொள்ள   அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.