Header Ads



UNP யின் தலைமையை சஜித் பிரேமதாஸ நிச்சயம் ஏற்பார்


நல்லாட்சிஅரசாங்கம்  பௌத்த மதத்தை புறக்கணித்தமைஇன்றைய வீழ்ச்சிக்கான பிரதான காரணம். பௌத்த மக்களின் ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதை பொதுஜன பெரமுன நிரூபித்துள்ளது என்று முப்பீட ஐக்கிய பிக்குகள் முன்னணியின் அனுநாயக்க மதுரட தம்மாலங்கார தேரர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்தை எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாஸ  நிச்சயம் ஏற்பார்.  அதற்கான  மார்க்கத்தை  நன்கு அறிவோம் எனவும் மதுரட தம்மாலங்கார தேரர் தெரிவித்தார்.

கொழும்பு - லங்காராம விகாரையில்  இன்று  வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் ரீதியில் பலம் வாய்ந்த    ஐக்கிய தேசிய கட்சி பாரிய  வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு  அக்கட்சியின்  தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அவருக்கு  ஆலோசனை வழங்கும் பௌத்த  மத பிக்குகளும் மூல காரணம். நல்லாட்சி அரசாங்கம்  பௌத்த சாசனத்திற்கு முரணாக செயற்படும் போது இவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. 

ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவை எதிர்க் கொள்ளும் என்பதை கட்சியின்  தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பலமுறை சுட்டிக்காட்டினோம். ஆனால் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. தான்தோன்றித்தனமாக செயற்பாடுகளின் பிரதிபலனை அவர் இன்று அனுபவிக்கிறார்.

பௌத்த பெரும்பான்மை மக்களின் ஆதரவு  இருந்தால் போதும் தனித்து பலமான அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதை   பொதுஜன பெரமுனவினர் இரண்டு தேசிய தேர்தல்களில் நிரூபித்து விட்டார்கள்.   ஆளும் தரப்பினை பலப்படுத்தும் செயற்பாடுகளையே  ஐக்கிய தேசிய  கட்சியின் நலன்  விரும்பிகள் என்று கூறிக் கொள்பவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

ரணில்  விக்கிரமசிங்க ஐ.தே.க.விலிருந்து தற்போதைய எதிர்க்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாஸவை  வெளியேற்றியமை   அரசியல் ரீதியில் அவர் செய்த  முதல் தவறு . கட்சியின் தலைமைத்துவ  பதவிக்கு   முன்னாள்  சபாநாயக்கர் கருஜயசூரிய பொருத்தமற்றவர்.   எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு  ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமை பதவி  வழங்கப்பட வேண்டும்.  அதற்கான நடவடிக்கைகளை இனி  முன்னெடுப்போம் என்றார்.

1 comment:

Powered by Blogger.