Header Ads



அதிகாரம் கிடைத்தது என்று, பழைய விதமாக செயற்படக் கூடாது - அஸ்கிரிய அனுநாயக்க தேரர்

நடந்து முடிந்த பொது தேர்தலில் வெற்றி பெற்ற தரப்பினருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அனுநாயக்கர் வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

கடந்த அரசாங்கத்தின் இரண்டு நிர்வாகங்கள் செயற்பட்டதால், நாட்டுக்கு நல்லது நடந்தது என்று மகிழ்ச்சியடைய முடியவில்லை .

இம்முறை பொதுத் தேர்தலில் நாட்டுக்கு நலன் பயக்கும் வகையிலான வெற்றிக் கிடைத்துள்ளது என எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைய முடியும். இந்த வெற்றியானது நாட்டு மக்கள் பெற்ற வெற்றியென கூற முடியும்.

அதிகாரம் கிடைத்து விட்டது என்று எண்ணி பழைய விதத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி செயற்பட்டால், நாட்டை உருவாக்க முடியாது.

நாட்டு மக்களின் பட்டினியை போக்கி நாட்டை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி அபிவிருத்தி செய்ய வேண்டும்.

நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் இலஞ்சம், கொள்ளை, மோசடி, ஊழல் என்பவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும்.

நீங்கள் உங்களது கடமையை செய்யுங்கள் - நான் எனது கடமையை செய்வேன் என ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார். ஒரு முறையல்ல, இரண்டு முறை மக்கள் இதற்கான ஆணையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

சிறந்த எதிர்காலத்திற்காக மக்கள் தமது கடமையை செய்தது போல், ஜனாதிபதியும் தனது கடமையை செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அனைத்து அரசியல்வாதிகளும் ஒற்றுமையாக இருப்பார்களேயானால் இந்த நாட்டை இலகுவாக கட்டியெளுப்ப முடியும்.தேரரின் கருத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்....
    .

    ReplyDelete
  2. முற்றாக ஒழிக்கப்படவேண்டியவற்றுள் முதன்மையாக இனவெறியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  3. அஸ்கிரிய பௌத்தபீடத்தின் அனுநாயக்கர் ஐயா அவரகள் மிகவும் பொருத்தமான சகல மக்களாலும் வரவேற்கத்தக்க செவ்விய கருத்தினை மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். உலகின் பொருளாதார அபிவிருத்தியில் பின்தங்கிய சகல நாடுகளுக்கும் எமது அனுநாயக்கர் ஐயா அவரகளின் கருத்து மிகவும் ஏற்புடையது. இந்த வெற்றியின் பங்கு சகல மக்களுக்கும் சென்றடைய வேண்டும். நாட்டின் பொருளாதாரம் சீரடைய வேண்டும். இனரீதியான சிந்தனை முடக்கப்படல் வேண்டும். சகல மக்களும் இலங்கையர்களாக ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். அதாவுல்லாஹ் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோரின் வெற்றி கூட பொதுப் பெரமுனவின் ஆசீர்வாதத்தால் கிடைக்ப்பெற்றதே. எனவே இலங்கையில் நீதியான நியாயமான ஆட்சி இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ந்து நடைபெற மக்கள் உதவ வேண்டும். இதற்கு அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அனுநாயக்கர் ஐயா அவரகளும் அனுசரனையாக இருந்து சிறப்பான வழிகாட்டியாகவும் இருத்தல் மிக முக்கியமானதாகும்.

    Most Respectable Anunayakkar of the Asgiriya Buddhist Sect has very clearly stated the auspicious concept which is most aptly welcomed by all the Citizen. Our Anunayakka's opinion is much relevant to our countries development and as well as the countries lagging in the economic development of the world. The role of this victory must be reached all citizens. The country's economy needs to te recovered. Racial thinking must be disabled. All people should live in unity and brotherhood as Sri Lankans. Even the victory of Athaullah and Qadir Masthan was achieved with the blessings of the Peramuna. Therefore, people must help to ensure that a fair and just rule in Sri Lanka to be continued for many more years to come. The Venerable Anunayakkar of the Asgiriya Buddhist Sect must be their patron and excellent guide.

    ReplyDelete

Powered by Blogger.