Header Ads



சுமத்ரா தீவில் நிலநடுக்கம் - இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை


இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் புதன்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஈ.எம்.எஸ்.சி மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்க‍ை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந் நிலையில் இந்த நிலநடுக்கம் தொடர்பில் அறிக்கையில் வெளியிட்டுள்ள இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறியுள்ளது.

1 comment:

  1. 'ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்'.
    (அல்குர்ஆன் : 3:30)

    ReplyDelete

Powered by Blogger.