Header Ads



சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை, மஹிந்தவிற்கு வழங்குமாறு கோரிக்கை


(இராஜதுரை ஹஷான்)  

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன். சுதந்திர கட்சி ஒன்றினைக்கப்பட்டு   அதன் தலைமைத்துவம் முழுமையாக பிரதமர் மஹிந்த   ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும். சுதந்திர கட்சி  தொடர்பில் எவரும் அக்கறைக்  கொள்ளவேண்டிய தேவை கிடையாது. முன்னாள்  ஜனாதிபதி   சந்திரிகா  பணடாரநாயக்க குமாரதுங்கவின்  கருத்துக்கள்  பயனற்றது   என நீர்வழங்கல் துறை  அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 கொலன்னாவ பிரதேசத்தில்  இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  30வருட கால சிவில் யுத்தத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ  2015ம் ஆண்டு  அரசியல் சூழ்ச்சிகளினால் தோற்கடிக்கப்பட்டார்.  கடந்த  ஐந்தாண்டு காலத்தில் மக்கள் 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை திருத்திக் கொண்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மற்றும்   பிரதமர் மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான   அரசாங்கத்தை பலமாக  ஸ்தாபித்துள்ளார்கள்.

ஸ்ரீ  லங்கா சுதந்திரகட்சி தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா  பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ள  கருத்துக்கள்  பயனற்றது.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன், சுதந்திர கட்சி ஒன்றினைக்கப்பட்டு   தiலைமைத்துவம் முழுமையாக   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும். சுதந்திர கட்சியை  பாதுகாக்கும்பொறுப்பு எமக்கும்     உண்டு.

 முன்னாள்   ஜனாதிபதி   சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடும் கருத்துக்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்.அவர்   எதிர் தரப்பிற்கு ஆதரவாக செயற்படுகிறார்.  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான   அரசாங்கத்தை மக்கள்தொடர்ந்து  பலப்படுத்துவார்கள்.  என்றார்.

No comments

Powered by Blogger.