Header Ads



"விமான நிலையங்களை மீளத்திறப்பதற்கான, தினமொன்றை இன்னமும் தீர்மானிக்கவில்லை"



நாட்டில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்காத நிலையில் விமான நிலையங்களை மீளத்திறப்பதற்கான தினமொன்றை இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. 

இச்சந்திப்பின் போது விமானநிலையங்களை மீளத்திறப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாகவே நாட்டின் விமானநிலையங்கள் மூடப்பட்டன. 

உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த நாடுகள் கூட, வைரஸ் மீண்டும் பரவலாம் என்ற அச்சுறுத்தல் நிலையின் காரணமாக தமது விமான நிலையங்களை மீளத்திறப்பதற்குத் தயக்கம் காண்பித்து வருகின்றன.

எனவே தான் நாமும் விமானநிலையங்களைத் திறப்பதற்கான தினத்தை இன்னமும் உறுதியாக நிர்ணயிக்காமல் இருக்கின்றோம். 

எனினும் இயலுமானவரை வெகுவிரைவாக விமான நிலையங்களைத் திறப்பதற்கே நாம் திட்டமிட்டிருக்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.