Header Ads



மேர்வினின் மகன், மாலக கைது


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க டி சில்வா காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வர்த்தகர் ஒருவரிடம் பணம் கோரி அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவை தேடி மேலும் காவற்துறை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக அவர் தங்கியிருந்த இடங்களில் முன்னெடுத்த சோதனைகளில் கைது செய்வதற்கு முடியாது போனதாக தலங்கம காவற்துறையினர் தெரிவித்தனர்.

இன்றைய தினம் இருவேறு இடங்களில் காவற்துறை குழுக்கள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தேர்தல் பணிகளுக்காக மாலக சில்வா குறித்த வர்த்தகரிடம் நிதிகோரியுள்ளதாக குறிப்படப்படுகிறது.

எனினும் அதற்கு வர்த்தகர் அந்த பணத்தை வழங்காமை காரணமாக அவருக்கு மாலக சில்வா உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

1 comment:

  1. சிறையில் தனிக்கூட்டில் இவனை இருபத்தைந்து வருடங்கள் அடைத்துவைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.