Header Ads



பாராளுமன்றம் அனுப்ப ஏற்றவர் ஞானசாரர், தேசிய பட்டியலை அவருக்கே வழங்க வேண்டும்

தேர்தலுக்கு முன்னர் அதுரலியே ரதன தேரர் கூறியவாறு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படுவதற்கு ஏற்றவர் ஞானசார தேரர் என்றும், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்னர் ரதன தேரர் தெளிவாகக் கூறியதாக சோபித்த தேரர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின்படி செயற்படுவது அவரின் பொறுப்பு என சோபித தேரர் தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பதவிக்காக இந்த வகையில் சர்ச்சை ஏற்படுத்துவது வாக் களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் கவலை அளிக்கும் விடயமாகும் அதேபோல் புத்த சாசனதிற்கு அவமானம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.