Header Ads



ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி, ஆணைக்குழுவிற்கு செல்ல மறுத்த மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி அவரை பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தன்னால் பொலிஸ் பிரிவுக்கு வர முடியாது எனவும், கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி, ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் குறித்த தினத்தில் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்று வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு நேற்றைய தினம் வருமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அவர் நேற்றைய தினம் அங்கு செல்லவில்லை.

எதிர்வரும் 31ஆம் திகதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு வந்து வாக்குமூலம் வழங்குவதாக முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார் என தெரியவருகிறது.

2 comments:

Powered by Blogger.