Header Ads



"எங்களுக்கு எதிராக எவரும் வாளை, வைத்திருப்பதை நாங்கள் விரும்பவில்லை"



மேற்குலகிடமிருந்து வரும் மனித உரிமை குற்றச்சாட்டுகள் முற்றுமுழுதாக நியாயப்படுத்த முடியாதவை என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் நல்லிணக்கத்துக்கு உதவப்போவதில்லை எனவும் நாங்கள் நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மாறாக இது எங்களை பிளவுபடுத்த முயல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எங்களுக்கு எதிராக எவரும் வாளைவைத்திருப்பதை விரும்பவில்லை, பலவந்தமாக நல்லிணக்கத்தை அடைய முடியாது என நாங்கள் கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அது சமூகத்திலிருந்து உருவாகவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எங்களை நியாயப்படுத்துவது எங்கள் இலக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமைச்சரவை ஆராயும் என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பான மீளாய்வு குழு சமர்ப்பித்த அறிக்கை புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

மீளாய்வு குழு தேசிய பாதுகாப்பு குறித்து பல விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது என தெரிவித்துள்ள அவர் இந்த கேள்விகளுக்கு விடைகளை காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மீளாய்வுகுழுவின் அறிக்கை புதிய அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்,அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரினதும் கருத்துக்கள் பெறப்படும்,அது முடிவடைந்ததும் மீளாய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்போம்என அவர் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றம் இணக்கப்பாட்டினை காண்பது குறித்து விவாதிக்கும் அது என்ன இணக்கப்பாடு என்பது எங்களுக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.