August 19, 2020

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று - பாராளுமன்ற கன்னி அமர்வு நாளை


புதிய அமைச்சரவை இன்று (19) முதன்முறையாக கூடவுள்ளது. 


முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 


இதேவேளை, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை (20) ஆரம்பமாகவுள்ளது. 


நாளை முற்பகல் 9.30 மணிக்கு முதலாவது அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.


0 கருத்துரைகள்:

Post a comment