Header Ads



தெஹிவளை மிருகக்காட்சிசாலை, இடம் பெயரப் போகிறதா...?


தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை - கஹபொல பகுதிக்கு மாற்றுவதற்கான திட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைப் பார்ப்பது ஒரு காலாவதியான முறைமையாகும்.

ஆகையினால் மிருகக்காட்சிசாலையை நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அது விலங்குக் கொடுமைக்கு வழிவகுக்காத வகையில் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலா துறை அமைச்சகத்தில் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்கா அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தெஹிளை மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்க மாதத்திற்கு சுமார் 40 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யானைகளைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றை ஊர்வலங்களில் பயன்படுத்த கொடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வழிகாட்டுதல்கள் விரைவில் அமைச்சரவையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.