Header Ads



சிறந்த அரசியல்வாதி, திலகரின் முன்மாதிரி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா நாடாளுமன்ற அனைத்து வரப்பிரசாதங்களையும் திருப்பி கையளித்துள்ளார்.

தனது நாடாளுமன்ற பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட பதவி அடையாள அட்டை, வாகனத்திற்கான வளித்திரைச் சுட்டு, மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு ஒப்பந்தம், நாடாளுமன்ற உறுப்பினருக்காக வழங்கப்பட்ட எஞ்சிய காகிதாதிகள் முதலானவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் சேவை பிரிவினருக்கு திருப்பிக் கையளித்துள்ளார்.

 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலில் களம் இறங்கி 67,761 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்த இவர், ஐந்து ஆண்டு கால செயற்பாடுகள் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் ஒட்டுமொத்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 ஆவது  

இந்த 2020 பொதுத்தேர்தலில் அவர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில் அவரைத் தேசியப் பட்டியல் உறுப்பினராக்க பிரேரிக்கப்பட்டு இருந்தபோதும் அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது. இதனை அடுத்து தான்சார்ந்த கட்சி மற்றும் கூட்டணி ஆகியவற்றின் சகல பொறுப்புகளையும் துறந்ததோடு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட சகல வரப்பிரசாதங்களையும்  மீளவும் கையளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான காலத்தில் இலங்கையில் ‘தூய அரசியல் கலாசாரத்தை’ உருவாக்கும் நோக்கிலான ‘மார்ச்12’ மக்கள் இயக்கத்தில் செயற்பாட்டு உறுப்பினரான இவர், அந்த ‘March 12 Movement’  இயக்கத்தின் இணையத்தளங்களில் தனத சொத்துப் பொறுப்பு விபரங்களை வெளியிட கைச்சாத்திட்டு அனுமதி வழங்கி இருந்தார். 

தாம் கட்சி, கூட்டணியில் இருந்து ஒதுங்கினாலும் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை என்றும் புதிய கட்சியை உருவாக்கவோ மாற்றுக் கட்சியில் இணையவோ போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முதல் இதே ஓகஸ்ட் 19 ஆம் திகதி இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.