Header Ads



ஒரே நாடு, ஒரே சட்டம் காதி நீதிமன்றங்களில் உள்ளதா..?

- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -


இலங்கையில் அமுலில் உள்ள இஸ்லாமிய சட்டங்கள் சம்பந்தமான போதிய அறிவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இல்லாமை ஒரு பெரும் குறையாகும்.குறிப்பாக  இஸ்லாமிய விவாக, விவாகரத்து சட்டம் சம்பந்தமான அறிவு பொதுமக்கள் இடத்தில் இல்லாமமையானது காதி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளில் பாரிய சந்தேகங்களை சம்பந்தப்பட்டவர்களிடத்தில் உருவாக்குகின்றது. என்னைப்பொறுத்தவரையில் காதி நீதிமன்றங்கள் பாரிய பிழைகளை விடுவததாக தெரியவில்லை .


ஒருசில காதி நீதிமான்கள் தவறுகளை இழைக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எல்லா காதி நீதிவான் களும் அவ்வாறு இல்லை. நீதவான்கள் பிழைகள் விட மாட்டார்கள் என்று யாரும் வாதிக்க முடியாது. ஏனைய நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் பல பிழைகளை தீர்ப்புகளில் விடுகின்றார்கள். அதற்குத்தான் மேல் முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. காதி நீதவான் களின் தீர்ப்புகளை  மேன்முறையீடு செய்வதற்கு காதிகள் சபை என்று ஒன்று இருக்கின்றது. இதனை பற்றிய போதிய அறிவும் பொதுமக்கள் இடத்தில் இல்லை. காதிகள் சபையின் தீர்ப்புகளை   கூட அங்கிருந்தும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது .ஆனால் இஸ்லாமிய விவாக, விவாகரத்து சட்டத்தின் படி காதி நீதி வான்களின் தீர்ப்புகளுக்கு எதிராக எவ்வாறு மேன்முறையீடு செய்யலாம் என்பது சம்பந்தமான போதிய அறிவு எமது மக்கள் இடத்தில் இல்லாமையும் ஒரு பாரிய குறையாகும் . 


குறிப்பாக 'தலாக்' என்ற முறையில் விவாகரத்தை கணவன் கூறும்போது விவாகரத்துக்கான காரணத்தை கணவன் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது இஸ்லாமிய சட்டத்தில் உள்ள ஒரு அடிப்படை விடையம் ஆகும். ஆனால் தலாக் விவாகரத்தை காதி நீதவான் வழங்கும்போது மனைவி நீதவான் மீது குறை கூறுவார். அவர் தனது பக்கத்து நியாயத்தை கருத்தில் எடுக்கவில்லை என்று கூறும் சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.ஏனைய மதத்தவர்களின் விவாகரத்து வழக்குகளில் சட்டத்தரணிகள் மூலமாக ஆஜராவதற்கு சந்தர்ப்பம் இருந்தாலும் இஸ்லாமிய விவாக விவாகரத்து வழக்குகளை விசாரிக்கும் காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு சந்தர்ப்பம் இல்லாமையும் ஒரு பெரும் குறையாகும். இங்கும் 'ஒரே நாடு ஒரே சட்டம்" என்ற விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

5 comments:

  1. அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, மற்றும் உள்ளவைகளின் பிழையான வழி நடத்தலில் ஏற்பட்ட பின்னடைவு தீர்ப்புகள் பிழையானதாக அமைந்தது, இது மறுக்கமுடியாத உண்மை, அதனால் மக்கள்
    தீர்ப்புகளுக்கு எதிராக கொதித்தெழுந்து மாற்று மதத்தவர்களிடம் உதவி தேடச்சென்றமையினால் வந்த விளைவு, எம்மை திருத்திக்கொள்ள,சுய பரிசோதனை செய்து கொள்ள, அல்லாஹ் எங்களுக்கு உணர்த்த பல தடவைகளில் பிரச்சினைகளை தந்திறுக்கிறான் ஆனால் நாம் தான் பிடிவாதமாக இருந்திறுக்கிறோம்.,
    இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவோம், தீர்ப்புகள் கொடுக்கும் போது அல்லாஹ்வுக்கு பயந்து கொடுப்போம், மக்களிடம் நல்ல பெயர் வாங்க இந்த உலமாக்களின் சிலர் செய்யும் திருகு தாளங்களில் இருந்து தப்பிக்க இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள முயற்சிப்போம்

    ReplyDelete
  2. நீங்கள் ஒரு சட்டத்தரணியாக இருப்பதினால் காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணி தேவை என்கிறீர்கள். அனால் விவாகரத்து கேட்கும் முஸ்லீம் பெண்களுக்கு விரகரத்து சீக்கிரமாக கிடைப்பதே சட்டத்தரணிகள் இல்லாததால் தான். சட்டத்தரணிகள் மட்டும் இருந்தால் காசை வாங்கிக்கொண்டு தனது கட்சிக்காரர்களுக்கு தந்திரங்களை சொல்லிக்கொடுத்து வருடக்கணக்கில் வழக்குகளை இழுத்தடிப்பார்கள். விவாகரத்து கேட்டவளுக்கு வாழ்க்கை முடிந்துவிடும். அனால் வழக்கு முடியாது.

    ReplyDelete
  3. ஒரு சஹாபி ஒருவர் (அல்லது ஒரு பெரியார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) தனது மனைவியை விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றுக்கு செல்கின்றார். அப்போது அவரது நண்பர் அவரிடம்; என்ன காரணத்திற்காக உங்கள் மனைவியை விவாகரத்து செய்யப் போகின்றீர்கள் என்று கேட்கின்றார்கள். அதற்கு அந்த சஹாபி; அவர் இப்போது என் மனைவி என்பதனால் அவருடைய குறைபாடுகளை குறிப்பிட இஸ்லாத்தில் எனக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டுச் செல்கின்றார். வுழக்கு முடிந்து விவாகரத்து வழங்கிய பின்னர் அதே நண்பர் மீண்டும் அந்த சஹாபியிடம்; இப்போது சொல்லுங்கள் என்ன காரணத்திற்காக உங்கள் மனைவியை விவாகரத்து செய்தீர்கள், என்று கேட்க அதற்கு அந்த சஹாபி தற்போது அவர் என்னுடைய மனைவி இல்லை என்றபடியால் இஸ்லாமியர் (எல்லோரும்தான்) ஒருவர் பிற பெண்கள் பற்றிய அந்தரங்க விடயங்களைப் பேசுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்று கூறினார்.

    “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற விடயத்தை சற்று தள்ளி வையுங்கள். இன்னமும் அதுபற்றிய சரியான தெளிவு இல்லை. கணவன் - மனைவியரைப் பற்றிய அந்தரங்கங்களை பொதுவெளியில் பகிரக்கூடாது என்ற விடயத்தில் இஸ்லாம் மிகவும் கவனமாக இருக்கின்றது. அதனாற்றான் நடுவர்களோ அல்லது பொதுமக்கள் இல்லாத இரகசியமான முறையில்/இடத்தில் காதி நீதிமன்றங்களின் விசாரணைகள் மிகவும் பக்குவமாக நடாத்தப்படல் வேண்டும் என இஸ்லாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

    ReplyDelete
  4. Well said brother Suhood.

    One important fact is the competence and qualification of the Quazis. How are they appointed? Is there any proper method/procedure for their selection and appointment? It is very important that proper Guidelines and Criteria are Established and Followed in the Selection Procedure of the Quazis so that competent persons are appointed. If this is done Immediately, there will be little or no Complaint about the judgements in the Quazi Courts.

    ReplyDelete
  5. Of course Muhandiram Sir. All these have to frame by the learned Ulamas in order to give early justice for the affected.

    ReplyDelete

Powered by Blogger.