August 08, 2020

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இருந்து இறுதி நேரத்தில் நீக்கப்பட்ட சு.க. முக்கியஸ்தர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்ட பின்னர் ஒரு சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை என்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை நியமிப்பதாக ஆரம்பத்திலேயே இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.


எனினும் இறுதி நேரத்தில் ரோஹன லக்ஷ்மன் பியதாச தேசிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பான விடயங்களை ஆராய சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a comment