Header Ads



புத்தள வாழ் யாழ் - கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனத்தின் அறிக்கை


நடந்து முடிந்த 2020 இன் பாராளுமன்றத் தேர்தலில்  பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்று இலங்கைத் திருநாட்டின் பாராளு மன்ற ஆசனங்களை அறுதிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.


இந்த சிறப்பான வெற்றிக்கு எமது மனமார்ந்த வாழ்த்தக்களை புத்தள வாழ் யாழ்,கிளிநொச்சி வெளியேற்பபட்ட சிவில் சமூக சம்மேளனம் சார்பாக மகிழ்ச்சியடைவதில் பெருமிதமம் அடைக்கின்றோம். 


தாய்திரு நாட்டின் சுபீட்சத்திற்கும் , நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும்  பாதுகாப்புக்கும், முறையான அபிவிருத்திக்கும், சிறப்பான பொருளாதார முன்னேற்றத்திற்கும் கிடைக்கப் பெற்ற வெற்றியே இதுவாகும் . 


நாட்டின் சிறப்பான தலைமைத்துவ வழி நடத்தலினாலும்  இன , மத , பிரதேச பேதங்களுக்கு அப்பாலும் நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கு ஏதுவாகவும் , இனஙகளுக்கிடையே ஒற்றுமையையும் ஜக்கியத்தையும், ஏற்படுத்தி  ஆசியாவின் ஆச்சரியமிக்க முன்னுதாரமான நாடாக மாற்றியமைக்க தங்களது ஆட்சியில் உறுதிபூண்டுள்ளீர்கள். இதற்கான முன்னெடுப்புக்கு கிடைத்த வெற்றியே  இதுவாகும்.            


கடந்த முப்பது வருடமாக இருந்து வந்த  பாரிய யுத்தத்தை முடிவுக்குக் கொணடு வந்து    நாட்டு மக்களை நிம்மதியாக வாழ வழியமைத்த சந்தர்ப்பம் தங்களது ஆட்சியிலேயே நடைபெற்றது.  தற்போது அதேபோல் மீண்டும்  ஒரு சந்தர்ப்பம் ஏற்படடுள்ளது. எங்களது தாய்திரு நாட்டை சிறப்பாக  நிர்வகிக்க ஒரு சிறப்பான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.  ஜனாதிபதியும் பாராளுமன்ற நிர்வாக பிரதிநிதிகளும் ஒரே கட்சியில் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும். 


இச்சந்தர்ப்பத்தில் வருகின்ற தங்களது நல்லாட்சியில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ், கிளிநொச்சி முஸ்லீம்களுக்கு அடிப்படைப் பொருளாதார,    வாழ் வாதார, பிரச்சினைகளுக்கான  நிரந்தரமான தீர்வுகளை பெற்றுத்தருமாறும், இழந்த இழப்பீடுகளுக்கான நஷ்ட ஈடுகளையும் பெற்றுத்தருமாறும் வேண்டுகின்றோம். இதன்மூலமாக  பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு பூரணமான நிரந்தர தீர்வு கிட்டுமென எதிர்பார்க்கின்றோம்.


எனவே சிறப்பான வெற்றிபெற்றுள்ள பொது ஜனபெற ஆட்சியளருடாக சிறப்பான நேர்மையான நல்லாச்சி மிளிர வல்ல இறைவனிடம் வேண்டுகின்றோம். இதயமபூர்வமான வாழ்த்துக்கள்     


புத்தள வாழ் யாழ், கிளிநொச்சி  வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம். 

தலைவர்         அப்துல் மலிக்   மௌலவி  


செயலாளர்    ஹஸன் பைறூஸ்

No comments

Powered by Blogger.