Header Ads



மட்டக்களப்பு மாவட்ட ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைகள் - கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாறு துஆ


- எஸ்.எம்.எம்.முர்ஷித், எச்.எம்.எம்.பர்ஸான் -

இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் இன்று சனிக்கிழமை (01.08.2020) தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

பெருநாளைக் கொண்டாடும் முஸ்லீம்கள் பெருநாள் தொழுகையில் இன்று காலை ஈடுபட்டனர் அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் பெருநாள் தொழுகைகள் பள்ளிவாயல்களில் இடம் பெற்றன.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை பிரதேசத்தில் பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும் ஹைராத் பள்ளிவாயலில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விருவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி நடாத்தி வைத்தார்.

இதன் போது நாட்டு மக்களுக்காகவும் அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டியும் கொரோனா நோயிலிருந்து உலக மக்களை பாதுகாக்குமாரும் வேண்டி துஆ பிராத்தனையும் இடம் பெற்றது.

2

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (1) சனிக்கிழமை செம்மண்ணோடைப் பகுதியில்  இரு இடங்களில் நடைபெற்றன.

கொவிட் – 19 காரணமாக சனநெரிசலை கட்டுப்படுத்தி, சமூக இடைவேளிகளை பேணும் நோக்கில் இம்முறை ஹஜ் பெருநாள் தொழுகை இரு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதென்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் தொழுகை மற்றும் குத்பா உரையினை ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்களும், செம்மண்ணோடை ஜெமீலா அரிசி ஆலை வளாகத்தில் நடைபெற்ற தொழுகை மற்றும் குத்பா உரையினை தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்களும் நிகழ்த்தினர்.

குறித்த தொழுகையினை நிறைவேற்ற ஆண்கள், பெண்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு, தொழுகை சுகாதார முறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளைப் பேணி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.