Header Ads



ஒரே பிரவசத்தில் பிறந்த 5 குழந்தைகள், தந்தை வெளியிட்ட தகவல்


இலங்கையில் நீண்ட காலத்தின் பின்னர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் நேற்றைய 28.08.2020 தினம் பிறந்தது.


கொழும்பு டி சொய்ஸா பெண்கள் வைத்தியசாலையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் இந்த 5 குழந்தைகள் பிறந்துள்ளது.


கம்பஹா - பெபிலியாவல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ரசாஞ்சலி ஜயவர்தன என்ற பெண்ணே இந்த குழந்தைகளை பெற்ற தாயாகும்.


இது அவரது முதலாவது குழந்தை பிரசவம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.


ஆசிரியரான அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று காலை 10 - 11 மணியளவில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 நிமிட காலப்பகுதியில் 5 குழந்தைகளும் பிறந்துள்ளது.


குறித்த குழந்தைகள் ஐவரும் சொய்ஸா டி பெண்கள் வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குழந்தைகளின் தந்தை கருத்து வெளியிடும் போது, “இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. எனது தேவைகளுக்காக பெற்ற குழந்தைகள். நான் யாரிடமும் உதவி கேட்க முடியாது. யாராவது விரும்பினால் உதவி செய்யட்டும். அதனை ஏற்றுக் கொள்வேன். இதுவரையிலும் குழந்தைகள் தொடர்பில் ஒன்றும் யோசிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் முதல் முறையாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் சேவை செய்த அதிகாரிக்கு ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் பிறந்த நிலையில், 2012ஆம் 2 தாய்மார்களுக்கு 5 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது.


நேற்று பிறந்த குழந்தைகள் இலங்கையில் பதிவாகிய நான்காவது சம்பவமாகும்.

No comments

Powered by Blogger.