Header Ads



இஸ்லாமிய தீவிரவாதம் பரவுவதை கண்காணிக்க, சிறப்பு பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தது

இலங்கையின் அரச புலனாய்வு சேவை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டாலும் புலனாய்வு தகவல்களை பொலிஸாருடன் பகிர்ந்துக்கொள்ளும் கடப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என் கே இளங்கக்கோன் இதனை உயர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியாக அழைக்கப்பட்ட அவர், தாம் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த காலப்பகுதியில் அரச புலனாய்வு சேவை தமது பதவியின் கீழ் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அப்போது அரச புலனாய்வுதுறைக்கு பணிப்பாளராக இருந்த நிலந்த ஜெயவர்த்தன, நாட்டில் அதிகரித்து வந்த இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பான தகவல்களை பொலிஸ் அதிகாரிகளுடன் பகிர்ந்துக்கொண்டதாக இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் அரச புலனாய்வுத்துறையினருக்கும், பொலிஸாருக்கும் அனுப்பிய கடிதங்களில் தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் இஸ்லாம் போன்ற அமைப்புக்கள் முஸ்லிம் இளைஞர்கள் ஊடாக தீவிரவாதத்தை பரப்புவதன் காரணமாக நாட்டில் பாரிய சேதம் ஏற்படலாம் என்பதை குறிப்பிட்டிருந்ததாகவும் இளங்கக்கோன் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு சபையும், இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பாக அடிக்கடி கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல்களை அடுத்து இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டில் பரவுவதை கண்காணிக்கும் வகையில் சிறப்பு பொறிமுறை ஒன்றை அமைத்திருந்ததாகவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்கே இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இஸ்லாத்துக்கும் தீவிரவாதத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்ள புனித அல் குர்ஆனைக் கற்பதுவும் மிக முக்கியமானதாகும்.

    ReplyDelete
  2. What about BUDDHIST TERRORISM.
    In 1983 Buddhist Terrorism created war for around 30 years.
    And all Buddhist terrorism was took this countries to back ward in developments... Until now.
    Arrest all the political leaders of Terror Zahran.

    First Stop Buddhist terrorism, Racism everything will stop Automatically.

    One Country one Nation. We love Ceylon...

    ReplyDelete

Powered by Blogger.