Header Ads



நாடாளுமன்றத்திற்கு நான் மிளகாய் துளை, கொண்டு சென்றது தவறில்லை - பிரசன்ன ரணவீர


படித்த புத்திசாலிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டும் என்று சமூகத்திற்குள் பேசப்பட்டு வருவது சரியானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் படித்த புத்திசாலிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டும் எனவும் இதற்காகவே வியத் கம அமைப்பின் உறுப்பினர்களுக்கு இம்முறை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வியத் மக சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களால் தமக்கு எந்த சவாலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட செய்தியாளர்கள், பிசன்ன ரணவீர கடந்த நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள பிரசன்ன ரணவீர, ஜனநாயகத்தை பாதுகாக்கவே தான் நாடாளுமன்றத்தில் மிளகாய் தூள் தாக்குதலை நடத்தியதாகவும் இதற்கு முன்னர் தான் கூறியதை தற்போதும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு நாடாளுமன்றத்தில் குண்டு வீச முடியுமாயின், ரஞ்சன் ராமநாயக்க, பாலித தெவரப்பெரும போன்றவர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு கத்திகளை கொண்டு வர முடியமாக இருந்தால், நானும் மிளகாய் துளை கொண்டு சென்றது தவறில்லை.

மிளகாய் தூளை கொண்டு தாக்குதல் நடத்தியதை ஜனாதிபதி மாத்திரமல்ல நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அன்று அதனை நான் செய்ய நேரிட்டது எனவும் பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.