July 16, 2020

ஆஸ்திரேலிய பழங்குடியினரிடையே அதிகரிக்கும் இஸ்லாமை ஏற்கும் நிகழ்வு - முஸ்லிம் ஆகியபின் வியத்தகு மாற்றங்கள்


Aashiq Ahamed

ஆஸ்திரேலிய குத்துச்சண்டை ஜாம்பவனான ஆண்டனி முன்டேன், தன்னை மீடியா எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு, 'முஸ்லிம், பழங்குடியினர், வெளிப்படையாக பேசுபவன்' என்று பதிலளித்தார். ஆஸ்திரேலிய பழங்குடிகள் இஸ்லாமை ஏற்கும் நிகழ்வானது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

ஆஸ்திரேலிய அரசு ஊடகமான SBS, சமீபத்திய மக்கட்தொகை கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி வெளியிட்ட செய்தியில், ஆஸ்திரேலிய பழங்குடிகளும், பக்கத்தில் இருக்கும் Torres Strait தீவுக்கூட்டத்தை சேர்ந்த மக்களும் இஸ்லாமை தழுவது வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்தது. சுமார் 1,140 பழங்குடியினர் தங்களை முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது, முந்தைய மக்கட்தொகை கணக்கெடுப்பை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.

ஏன் இஸ்லாமை தேர்ந்தெடுக்கின்றனர்? இவர்களிடையே இதுக்குறித்த ஆய்வை மேற்கொண்ட ஆசிய இன்ஸ்டிடியூட்-டின் உறுப்பினரான டாக்டர்.பீட்டா ஸ்டீவன்சன் பின்வருமாறு விவரிக்கிறார்.

"நிற வேறுபாடுகளும், மொழி வேறுபாடுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவை. மக்களை வெவ்வேறு விதமாக படைத்தது இறைவனின் நாட்டமாகவே பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்த பழங்குடியினரை பொருத்தவரை, தங்கள் மொழியை மாற்ற வேண்டியதில்லை தங்களின் கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதில்லை. இவற்றுடனேயே இஸ்லாம் இவர்களை ஏற்றுக்கொள்கின்றது.

முஸ்லிமானதால் தங்களின் பழங்குடியின அடையாளம் திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளதாக நான் பேசியவர்கள் கூறுகின்றனர். இப்படியான பதிலை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. இஸ்லாமை தழுவும் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய பதில்கள் தனித்துவம் வாய்ந்தவை.

பழங்குடியின சமூகத்தில் மதுவும், சூதாட்டமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாமை பொருத்தவரை நீங்கள் மது அருந்தக்கூடாது, சூதாடக்கூடாது. இஸ்லாமின் இத்தகைய அடிப்படை கொள்கைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை மிகவும் பயனுள்ளதாகவே இவர்கள் காண்கின்றனர். இஸ்லாமை ஏற்பதற்கு முன்னால் தாங்கள் கோபக்காரர்களாக இருந்ததாகவும், தற்போது அமைதியை விரும்புபவர்களாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமை தழுவியதற்கு ஆண்களும் பெண்களும் சில பொதுவான காரணங்களை கூறினாலும் பாலினம் சார்ந்த சில தனித்துவமான காரணங்களும் உண்டு.

குடும்பத்தை காப்பாற்றுவதும், பராமரிப்பதும் ஆண்களின் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது. பழங்குடியின ஆண்களை பொருத்தவரை, மனைவி மற்றும் குழந்தைகளை காக்கும் பொறுப்புணர்வு தங்கள் மீது சுமத்தப்படுவதை விரும்புகின்றனர்.

பெண்களை பொருத்தவரை, பெற்றோரில் ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய குடும்பங்கள் (Single-headed household) பழங்குடியின சமூகத்தில் நிறைய உண்டு. அவற்றில் பலவற்றில் பெண்கள் மட்டுமே உள்ளனர். ஆகையால், இஸ்லாம் ஆண்களுக்கு குடும்ப பொறுப்புணர்வை சுமத்துவது இவர்களை ஈர்க்கின்றது. மேலும், திருமணத்தின் மீதான அழுத்தமும், குடும்பத்தின் முக்கியத்துவமும், அதில் பெண்களின் பங்கும் இஸ்லாமை நோக்கி இந்த பெண்கள் கவரப்பட காரணமாக இருக்கின்றன"

படத்திற்கு நன்றி: SBS
செய்திக்கான ஆதாரம்: https://www.sbs.com.au/…/pictures-muslim-aboriginal-and-out…

2 கருத்துரைகள்:

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4: பெண்கள் 34)
www.tamililquran.com

Post a comment