July 14, 2020

உலக நாடுகளின் எதிர்ப்பை நிராகரித்த எர்துவான், இஸ்லாமிய எதிர்ப்புவாதத்திற்கு எதிராக எதுவும் செய்யாதவர்கள் எனவும் சாடல்


துருக்கியின் ஸ்தான்பூல் நகரில் இருக்கும் வரலாற்று புகழ் மிக்க ஹகியா சோபியா கட்டடத்தை பள்ளிவாசலாக மாற்றியதைத் திரும்பப் பெறும்படி தேவாலயங்களின் உலக சபை விடுத்த கோரிக்கையை துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் நிராகரித்துள்ளார்.

நாட்டின் விருப்பிற்கு அமைய அந்தக் கட்டடத்தை பயன்படுத்தும் உரிமை இருப்பதாக எர்துவான் வலியுறுத்தியுள்ளார்.

இதனை பள்ளிவாசலாக மாற்றுவது பற்றி தொடர்ந்து கூறி வந்த எர்துவான், 2018 ஆம் ஆண்டு ஹகியா சோபியாவில் குர்ஆன் வசனங்களையும் ஓதினார்.

“தமது சொந்த நாட்டில் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்திற்கு எதிராக எதுவும் செய்யாதவர்கள் துருக்கியின் இறையாண்மை உரிமையை பயன்படுத்துவதற்கு எதிராக தாக்குதல் தொடுக்கின்றனர்” என்று உரையாற்றிய எர்துவான் குறிப்பிட்டார்.

1,500 ஆண்டு பழமையான ஹகியா சோபியா கட்டடம் ஒரு ஓர்தடொக்ஸ் கிறிஸ்தவ தேவாலயமாக இருந்தபோதும் தற்போது ஸ்தான்புல் என அழைக்கப்படும் கொன்ஸ்டாடினோபிலை 1453 இல் உஸ்மானியர்கள் கைப்பற்றிய பின் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது. மதச்சார்பற்ற துருக்கி அரசு 1934 இல் அதனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றியது.

எனினும் 1934இல் எடுக்கப்பட்ட முடிவை உயர் நீதிமன்றம் ரத்துச் செய்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அந்தக் கட்டடத்தை ஒரு பள்ளிவாசலாக பிரகடனம் செய்த எர்துவான், தொழுகை நடத்த அனுமதி அளித்தார். வரும் ஜூலை 24 தொடக்கம் யுனெஸ்கோ மரபுரிமை சொத்தாக இருக்கும் இந்தக் கட்டடத்தில் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முடிவுக்கு கிரேக்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டதோடு பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஏமாற்றத்தை வெளியிட்டன. இந்த முடிவு குறித்து ரஷ்யா வருந்துவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ரூஷ்கோ தெரிவித்தார்.

இந்நிலையில் தேவாலயங்களின் உலக சபை, எர்துவானுக்கு எழுதிய கடிதத்தில் “கவலை மற்றும் அதிர்ச்சி’ வெளியிடப்பட்டிருந்ததோடு இந்த முடிவை உடன் திரும்பப் பெறும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.

9 கருத்துரைகள்:

GREAD LEADER ALHAMDULILAH

Those countries do not worry about Zeonist occupation of palastine, rather countries like US still trying to donate jerusalam (that does not belong to US) to Zeonist.

But they oppose right of turkey to use a building of its own as a masjid for worshipping GOD, which is for good course.

We Muslim stronly rely on ONE TRUE GOD alone.

இது கிரேக்க ஓத்தோடெக்ஸ் கத்தோலிக்கர்களின் கட்டிடம். இது இன்னொரு பாபர் மசூதிப் பிரச்சினை. நீண்ண்டகால பின்விழைவுகளை ஏற்படுத்தக்கூடியது. துருக்கியின் இத்தகைய போக்கு துருக்கியர்களால் ஒடுக்கபடும் குர்திஸ் முஸ்லிம் சிறுபாண்மையினரின் போராட்டங்களுக்கு நிச்சயம் உலக நாடுகளின் ஆதரவு அதிகரிக்க உதவும்.

ஜெயமோகன் ஐயா! குறித்த தேவாலயம் மன்னர் பாதிஹ் அவர்களால் பணம் கொடுத்து வாங்கப்பட்ட பின்னரே பள்வாயிலாக மாற்றப்பட்டது. (அதற்கான ஆதாரங்கள் துருக்கய உயர் நீதிமண்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன) இன்றும் கூட ஐரோப்பாவில் பணம் கொடுத்து வாங்கப்படும் பல தேவாலயங்கள் பள்வாயில்களாக மாற்றப்படுகின்றன.

அடுத்த விடயம் ஜாமியு குர்துபா எனும் ஸ்பெயினின் மிகப்பெரிய பள்ளி வாயில் இன்று தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது. (மொத்தமாக மூன்று பள்ளிகள்)
ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்திலே பல பள்ளிவாயில்கள் இடிக்கப்பட்டும், இன்னும் சில தேவாலயங்கலாக மாற்றப்பட்டுமுள்ளன.இதே வேலையை சீனா இன்று செய்து வருகின்றது.

முஸ்லிம்களின் புனித தளங்களில் ஒன்றான பைதுல் மக்திஸ் யூதர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. (அதற்க்கு உதவியவர்கள்ஐரோப்பியர்கள், அமேரிக்கர்கள், ரஷ்யர்கள்)
இவர்கள் செய்வதெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டா நடக்கின்றது. இப் பள்ளி விடயத்தில் சட்டரீதியாகவும்,வரலாற்று ரீதியாகவும் உரிமையை கொண்டுள்ள துருக்கி மட்டும் என்ன பாவம் செய்தது.

Mr. Jayabalan,, how come you forgot this building was more than 500 years a Masjid officially? the western puppet ATTATRUK the destroyer of Islamic culture in Turkey, turned it to meuseaum for the interst of West.

Now the current ruler of turkey, is returning it to people for worlshipping true God, with court order. The building belongs to Turks who were christian before and later became muslims. So their current generation have more right on it than any others in this world.

Look how many historically old masjids in Spain are forcefully truned into churches ? But no once consider it an issue..

Babery masjid was buit by Muslims and still Muslim live there, So it has different story Mr. Jaya.
We would like to see you justful.

When Iraq was invaded by US army in 2003 they
allowed and encouraged the 6k years old museum to be looted.Because that museum contained the most valuable evidence for Islamic origin and civilization.Their purpose was to tarnish and destroy the islamic history and identity so that to help creating greater zionist state. Niyas Ibrahim.

வெளித் தலையீடுகளில் இருந்து துருக்கி  வெற்றி பெற்று, மஸ்ஜிதுல் அக்ஸாவையும் மீளப் பெற்று, இழந்த இஸ்லாமிய கிலாபத்தை மீள் நிர்மாணித்து, ஒடுக்கப்பட்ட உலக முஸ்லிம்களின் உரிமைகளை உறுதி செய்து கொள்ள ஒற்றுமையாய் ஆதரவுக்கரம் நீட்டுவோமாக.

முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் . இதை தட்டி கேட்க முடியாத உலகம். இதை பின்பற்றி முஸ்லீம் அல்லாத நாடுகளில் உள்ள இஸ்லாமிய வழிபாடு இடங்களை ஏனைய மதங்களுக்கு மாற்றினால் எப்படி இருக்கும்?

Post a comment