Header Ads



கொரோனா வைரஸ்,, தேசிய பேரழிவாக மாறலாம் - கரு எச்சரிக்கை

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது என விசேட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் இது தேசிய பேரழிவாக மாறாலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் தனது பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் என குறிப்பிட்டு;ள்ள சபாநாயகர் அனைவரையும் மிகவும் தீவிரமாக சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய்பரவுவதை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நிலையை தேர்தலின் போது உறுதி செய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்,எனினும் இந்த வழிகாட்டுதல்கள் வர்த்தமானி அறிவித்தல்களாக வெளியிடப்படாதது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல்கள் இல்லாததன் காரணமாக சட்டஅமுலாக்கல் அதிகாரிகளால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 பிரதமர் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வேண்டுகோள்களை விடுத்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் தேர்தல் பிரச்சாரங்கள் போன்ற கடும் போட்டித்தன்மை நிறைந்த சூழ்நிலைகளின் போது சட்டரீதியில் கட்டுப்படுத்தாத விடயங்களால் முழுமையான பலன் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களில் பல அரசியல்வாதிகள், இந்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு இல்லாததை பயன்படுத்தி அந்த விதிமுறைகளை மீறும் அரசியல் பிரச்சாரக்கூட்டங்களை ஒழுங்குசெய்ததை காணமுடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.